உயர்திறன் கொண்ட பேட்டரியுடன் புதிய செல்பேசி அறிமுகமாகிறது
சென்னை, ஜூன் 12 உயர் செயல்திறன் கொண்ட செல்பேசிகளை தயாரிக்கும் ஐக்யூஓஓ, ஜூன் 18 அன்று ஐக்யூஓஓ Z10 Lite 5G-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. சுறுசுறுப்பான வாழ்க்கை முறை கொண்ட மாணவர்கள் மற்றும் பயனர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த புதிய செல்பேசி, வகுப்புகளில் கலந்துகொள்வது, தொடர்பில் இருப்பது, வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வது, ரீல்களில் ஸ்க்ரோலிங் செய்வது, பயணத்தின்போது கேமிங் என அன்றாட தேவைகளை கையாள வடிவமைக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் பேட்டரி திறன், 5G இணைப்பு ஆகியவற்றை இது கொண்டுள்ளது. மிகப்பெரிய 6000mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.