காவலர்கள் வார விடுமுறை எடுப்பதற்கு புதிய செயலி அறிமுகம்
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக காவலர்கள் வார விடுமுறையை முறையாக எடுக்க வசதி செய்யும் புதிய செயலியை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. ஒரு காவலரின் வார விடுமுறை காவல் ஆய்வாளரால் நிராகரிக்கப்பட்டால் உயரதிகாரிகளின் கவனத்திற்கு நேரடியாக வரும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.