tamilnadu

img

கடும் கெடுபிடிக்கு மத்தியில் நீட் தேர்வு

சென்னை,ஜூலை 17- இளங்கலை மருத்துவ படிப்பு சேர நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் திங்களன்று (ஜூலை 17) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5.20 மணிக்கு முடிந்தது. இதில் 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற் றனர். 3500க்கும் அதிகமான மையங்க ளில் தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 1 லட்சத்திற்கு மேல் எழுதி னர். நாடு முழுவதும் 546 நகரங்களி லும், இந்தியாவிற்கு வெளியே 14 மையங்களிலும் போட்டித் தேர்வுகள் நடைபெற்றன. ஒட்டுமொத்தமாக 18 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.  தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி  உட்பட 13 மொழிகளில் தேர்வுகள் நடை பெற்றன. தமிழ்நாட்டில் இந்தாண்டு ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ண ப்பித்திருந்தனர். அரசுப் பள்ளிகளில் இருந்து 15 ஆயிரத்திற்கும் அதிக மான மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, கடலூர் , காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நெல்லை, வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் என 18 நகரங்களில் தேர்வுகள் நடைபெற்றன. மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். முழுக்கை சட்டை அணியக் கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். மென்மையான நிறத்தில் உடைகளை அணிய வேண்டும். முழுக்கைச் சட்டை அணிந்தால் தேர்வு மைய நுழைவாயிலில் கத்தரிக்கோல் வைத்து பாதுகாப்பு அலுவலர்கள் கத்தரிப்பார்கள்.

மாணவர்கள் மற்றும் மாணவிகள் பெல்ட் அணிதல் கூடாது. மாணவிகள், ஹீல்ஸ் வகை காலணிகள் அணிவதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்கள் ஷூ அணியக்கூடாது. சாதாரண காலணியை அணிய வேண்டும். மொபைல் போன், ப்ளூடூத், கைகடிகாரம், பென்டிரைவ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. மாணவிகள் காதணி மற்றும் செயின் உள்ளிட்ட ஆபரணங்களை அணியக்கூடாது. வளையல் அணியக்கூடாது. பதிவிறக்கம் செய்யப்பட்ட 2 ஹால் டிக்கெட்டுகள் மாணவர்கள் தங்களுடன் கொண்டு வர வேண்டும் . ஹால் டிக்கெட்டில் பெற்றோர் கையொப்பம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது எந்த வகையான பாஸ்போர்ட் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதோ, அதே புகைப்படம் இரண்டு கொண்டு வருதல் வேண்டும். மாணவர்கள் வீட்டிலிருந்து ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில், 50 மில்லி லிட்டர் கொண்ட சானிடைசர் கையுறைகள் மற்றும் முக கவசம் ஆகியவற்றுடன் வரவேண்டும்.  அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் . தேர்வு தொடங்குவதற்கு முன்பாக தரப்படும் விடைத்தாளில் மாணவர்கள் தங்களுடைய விவரங்களை கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் மாணவர்கள் தங்களுடைய இல்ல முகவரிக்கான அடையாள சான்றாக, அரசு வழங்கிய ஏதேனும் ஒரு அசல் ஆவணத்தை கொண்டு வர வேண்டும். அதன்படி வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான் கார்டு , ஓட்டுனர் உரிமம், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய ஹால் டிக்கெட், பாஸ்போர்ட் , ரேசன் அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் கொண்டு வர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது