tamilnadu

img

செம்பனார்கோவிலில் தேசிய அளவிலான கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, யோகா சாம்பியன்ஷிப்

செம்பனார்கோவிலில் தேசிய அளவிலான கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, யோகா சாம்பியன்ஷிப் 

1,900 மாணவர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை, ஆக. 4-  மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோவிலில் “தமிழன் ஸ்போர்ட்ஸ்  அகாடமி” சார்பில், தேசிய அளவிலான கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிறன்று நடைபெற்றன.  இந்நிகழ்ச்சிக்கு, உலக சிலம்ப விளையாட்டு சங்க நிறுவனத் தலைவர் முனைவர் “சிலம்பம்” சுதாகரன் தலைமை வகித்தார். கலைமகள் பள்ளி  நிறுவன நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு, தயாளன் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் தயாளன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மயிலாடு துறை ரயில் ரோட்டரி கிளப் சங்கத்தின் சித்திரவேல் வரவேற்று பேசினார். போட்டிகளை மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  இப்போட்டிகளில் கராத்தே  பிளாக் மற்றும் கலர் பெல்ட்டுகளுக் கான போட்டியில் கட்டா, குமித்தே பிரிவுகளிலும், யோகாசன போட்டி யில் புஜங்காசனம், சர்வாங்க ஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களில் இரண்டு யோகா ஆசனங்களையும்,  சிலம்பாட்டத்தில் குத்துவரிசை, தட்டு வரிசை, அடிவரிசை, பிடி வரிசை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 7  வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட  மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி னர்.  மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தமி ழகத்தின் பல்வேறு மாவட்டங்களி லிருந்து சுமார் 1,900 மாணவ-மாண விகள் போட்டிகளில் பங்கேற்றனர். தமிழன் ஸ்போர்ட்ஸ் அகாடமி கராத்தே  பயிற்றுநர் விநாயகம் ஏற்பாட்டில் நடை பெற்ற இப்போட்டிகளில் கராத்தே, சிலம்பம், யோகா கலை வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.