tamilnadu

img

தமிழ்நாட்டில் முதன்முறை கன்னியாகுமரியில் 148 அடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி

நாகர்கோவில், ஜூன் 29 தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் தலை மையில், மாநிலங்களவை உறுப்பி னர்  அ.விஜயகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஹரி கிரண்  பிரசாத், கன்னியாகுமரி நாடாளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த்,  நாகர்கோவில் மாநகர மேயர்  ரெ.மகேஷ் சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன் (திருநெல் வேலி), ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), செ.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்) ஆகி யோர் முன்னிலையில் புதனன்று கன்னியாகுமரி மஹாதானபுரம் ரவுண்டானா நான்குவழி சாலை பகுதியில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள 148 அடி உயரமுள்ள கம்பத்தில் தேசிய கொடியினை பொத்தான் அழுத்தி ஏற்றி வைத்தார்.

பின்னர் அமைச்சர் பேசுகையில், கன்னியாகுமரி மஹாதானபுரம் ரவுண் டானா சந்திப்பில், மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.75 இலட்சம் செலவில் தேசியக் கொடி எந்நேரமும் நிரந்தரமாக பறக்கும் வகையில் பிரமாண்ட கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. 148 அடி உயரம் கொண்ட இந்த கம்பத்தில், 40 அடி நீளம் கொண்ட இந்திய தேசியக் கொடி பறக்கும் வகையில் பிரமாண்ட மாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த  பிரமாண்டமான கம்பத்தில் தமிழ் நாட்டில் முதன்முதலாக தேசியக் கொடி இன்று பறக்கவிடப்பட்டுள்ளது. இவ்வாறு  அவர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர்  சேதுராம லிங்கம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர்  சேகர், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர்  குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ் வரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.அழகேசன், வழக்கறி ஞர் தாமரைபாரதி, நாகர்கோவில் நகர்மன்ற உறுப்பினர் முத்துராமன், வழக்கறிஞர்  சதாசிவம், ஜீவா, பூதலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.