நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துவக்கம்
நாமக்கல், ஆக.14- புதிதாக உருவாக்கப்பட்ட நாமக் கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி யின் செயல்பாட்டை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். கூட்டுறவுத் துறை சார்பில் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலி ருந்து பிரித்து, நாமக்கல் மாவட்டத்தை செயல் எல்லையாகக் கொண்டு புதி தாக உருவாக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் சென்னை யிலிருந்து வியாழனன்று தொடங்கி வைத் தார். இந்த கூட்டுறவு வங்கியில் 165 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களும், 4 மலைவாழ் மக் கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங் கங்களும், 393 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களும், 86 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், 26 பணியாளர் கூட்டுறவுக் கடன் சங்கங்களும், 3 வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களும், 5 கூட்டுறவு நகர வங்கிகளும், 7 தொடக்கக் கூட்டு றவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளும் மற்றும் ஒரு கூட்டுறவு சர்க் கரை ஆலை உள்ளிட்ட 746 சங்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ரூ.76.19 கோடி பங்குத் தொகையுடனும், ரூ.1826.56 கோடி இட்டு வைப்பும், ரூ.1636.07 கோடி கடன் நிலுவையும் கொண்டு செயல் படத் தொடங்கியுள்ளது. இவ்வங்கியில் 2024 - 2025 ஆம் நிதியாண்டில் 55,583 விவசாயிகளுக்குப் பயிர்க்கடனாக ரூ.625.81 கோடியும், கால்நடை பராம ரிப்புக்கடனாக 14,346 விவசாயிகளுக்கு ரூ.117.86 கோடியும், மத்திய காலக்கட னாக 1,324 விவசாயிகளுக்கு ரூ.13.78 கோடியும், நகைக்கடனாக 1,64,969 பேருக்கு ரூ.1,489.81 கோடியும், மகளிர் சுய உதவிக்குழு கடனாக 1,878 குழுக்க ளுக்கு ரூ.162.65 கோடியும், 473 மாற்றுத் திறனாளிகளுக்குக் கடனாக ரூ.2.69 கோடியும், 180 விவசாயிகளுக்கு தானிய ஈட்டுக்கடனாக ரூ.11.85 கோடியும், 776 கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்குக் கடனாக ரூ.3.99 கோடியும் வழங்கப் பட்டுள்ளன. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதலாவதாக உருவாக் கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஒரு மேலாண்மை இயக்குநர், ஒரு முதன்மை வருவாய் அலுவலர், ஒரு பொது மேலாளர், 2 உதவிப் பொது மேலாளர்கள், 23 மேலா ளர்கள், 34 உதவி மேலாளர்கள், 93 உதவியாளர்கள், 4 அலுவலக உதவியா ளர்கள் ஆகிய 159 பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. நாமக்கல் மாவட்டத்தில் நடை பெற்ற இந்நிகழ்வில், இந்த கூட்டுறவு வங்கித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வி. எஸ்.மாதேஸ்வரன், சட்டமன்ற உறுப் பினர்கள் பி.ராமலிங்கம், கே.பொன்னு சாமி, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவா ளர் க.நந்தகுமார், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.