tamilnadu

img

ரூ.12 கோடியில் நாகேஸ்வரராவ் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடக்கம்

ரூ.12 கோடியில் நாகேஸ்வரராவ் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடக்கம்

சென்னை, செப். 21 - ரூ.12 கோடி மதிப்பீட்டில் நாகேஸ்வர ராவ் பூங்கா மேம்படுத்தும் பணி தொடங்கப் பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123க் குட்பட்ட மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் நாகேஸ்வரராவ் பூங்கா உள்ளது. இந்த பூங்கா 20.10.1949 அன்று அப்போதைய மதராஸ் மாகாணத்தின் பிரதமர் பி.எஸ்.குமாரசாமிராஜா திறந்து வைத்தார் . இப்பூங்காவானது அப்பகுதியில் வசித்த சுதந்திரப் போராட்ட வீரரான நாகேஸ்வர ராவ் பெயரால் அழைக்கப்படுகிறது. சென்னை நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பசுமை வளம் நிறைந்த இந்த பூங்கா சுமார் 4 ஏக்கர் பரப்பளவு (16ஆயிரத்து 929.17 சதுர மீட்டர்) கொண்டது. இங்கு சமூக அரங்கு, பேட்மிண்டன் மைதானம், வெளிப்புற உடற்பயிற்சி மையம் அமர்வு இடம், நீர்நிலை கட்டமைப்பு, பசுமைப் பரப்பு, பேவர் பிளாக் பதித்த நடைபாதை, குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, நுழைவு வாயில் ஆகியவற்றை கொண்டுள்ளது. இப்பூங்காவில் தற்போது “பசுமைத் தடம்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு  மேம்படுத்தி புதுப்பிக்கும் பணிகள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.12.22 கோடி மதிப் பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் இப்பூங்கா மேலும் பசுமை நிறைந்த மற்றும் நிலைத்தன்மை கொண்ட, அழகிய வடிவமைப்புடன் பாரம்பரிய அழகை பேணும்படியாக மேம்படுத்தப்பட உள்ளது. இந்த மேம்பாட்டுப் பணிகளில் அழகிய வடிவமைப்புடன் கூடிய நுழைவு வளாகம், கலந்துரையாடும் இடம், பூப்பந்து மைதானம், குழந்தைகள் விளையாடும் பகுதி, குழந்தைகள் விளையாட்டு உப கரணங்கள், நீரூற்றுடன் கூடிய இருக்கை கள், மரங்களைச் சுற்றிலும் அமரும் இடம், அழகிய வடிவமைப்புடன் கூடிய அமரும் இடம், டென்சைல் கூரையுடன் கூடிய அமரும்  இடம், நீர்நிலை கட்டமைப்பு, ரிப்பன் வடி வில் அமரும் இடம், பசுமைப் பரப்பு, செயற்கை நீரூற்று, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கைப்பிடிகள் அமைத்தல், தண்ணீர் தெளிப்பு ஏற்பாடுகள், குடிநீர் மற்றும் மின் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்து தல், சுற்றுச்சுவர் அமைத்தல், பெவிலியன் கூரை அமைப்பு, அறிவிப்புப் பலகைகள், ஒலி  அமைப்பு, ஒப்பனை அறை மற்றும் பாது காவலர் அறை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த மேம்பாட்டுப் பணிகளைத் நகராட்சி நிர்வாகத்துளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மேயர் ஆர்.பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., த. வேலு எம்எல்ஏ, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் 123 வார்டு  மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி, ஆணை யர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.