உணவுப்பொருள் விநியோகத்தில் முறைகேடு: கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், ஜூன் 9- குமரி மாவட்ட மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கோணம், உடை யார்விளை, காப்புக்காடு ஆகிய கிட்டங்கிகளிலிருந்து நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் தரமற்றதாகவும், எடை குறை வாகவும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் அதிகாரிகளும் கடை ஊழியர்களை மிரட்டு வது, அராஜகமாக நடந்து கொள்வது என அடாவடித்தன மாக நடந்து கொள்கின்றனர். மேலும் நியாய விலை கடை ஊழியர்கள்தான் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என தவ றான பிரச்சாரத்தையும் சில அதிகாரிகள் பரப்பி வருகின்ற னர். எனவே நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளிலிருந்து நியாயவிலை கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் எடை குறைவின்றியும் தரமான உணவு பொருட்களை குறித்த நேரத்தில் வழங்கவும் வலியுறுத்தி சிஐடியு குமரி மாவட்ட கூட்டு றவு ஊழியர் சங்கம் சார்பில் கோணம் அரசு நுகர்பொருள் வாணிப கிட்டங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எச்.ஜாண் சௌந்தர் ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் பி. சிங்காரன், முன்னாள் எம்பி ஏ.வி.பெல்லார்மின், சிஐடியு மாவட்ட நிர்வாகி எஸ்.அந்தோணி ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட செயலாளர் சௌந்தர், சிஐடியு மாவட்ட நிர்வாகி சந்திர போஸ், பத்மகுமார், ராஜேஷ், ராபின்சன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
தஞ்சாவூர், ஜூன் 9- தஞ்சாவூர் முனிசிபல் காலனி 4-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன்(59). இவர் மின்வாரியத்தில் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் கண்ணன் தனது குடும்பத்து டன் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இதில் ஞாயிறு அதிகாலை மர்ம நபர்கள் கண்ணன் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனராம். இதன் புகாரில் மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.