tamilnadu

img

நாகை நகராட்சி தூய்மைப் பணியாளர் போராட்டம் வெற்றி!

 

நாகை நகராட்சி தூய்மைப் பணியாளர் போராட்டம் வெற்றி!

 

நாகப்பட்டினம், ஆக. 1-  நாகப்பட்டினம் நகராட்சி டிவிசன் 1 (நாகூர்) இல் 35 தூய்மைப் பணி யாளார்கள்,  8 ஓட்டுநர்கள் பணியாற்றி னர். அவர்கள் சிஐடியு சங்கத்தின் உறுப்பினர்கள். அதில் சங்கத்தின் தலை வர் எஸ். சுதா, உறுப்பினர் பிரச்சனை களுக்கு தீர்வு  பெற உதவுவார். நிர்வாக தவறுகளை சுட்டிக் காண்பிப்பார் .  குடும்ப சூழ்நிலை காரணமாக 10 நாட்கள் விடுப்பு எடுத்த அவர், மீண்டும் 2 நாட்கள் விடுப்பு எடுத்துள் ளார். கடந்த ஜூலை 16 அன்று வேலை  செய்ய வரும்போது, வேலை கொடுக்க மறுத்து மேலாளரை பார்க்கச் சொல்லி அலைக்கழிக்கப்பட்டார். இருமுறை நகராட்சி ஆணையரை, சங்கத்தின் சார்பில் சந்தித்தும் முன்னேற்றம் இல்லை. எஸ். சுதாவிற்கு பதிலாக புதிய நபர் சேர்க்கும்போது, அதைத் தட்டிக் கேட்ட சுமதி, விஜய பாரதி, அமுதா ஆகியோருக்கும் வேலை கொடுக்கவில்லை. இதை கண்டித்து ஓட்டுநர் உள்பட அனைவரும், ஜூலை 30 அன்று வேலைநிறுத்தம் செய்தனர். காலை 8.30 மணிக்கு வந்த சுகாதார ஆய்வா ளர், நீக்கப்பட்ட அனைவரையும் வேலை செய்ய அனுமதிப்பதாகவும், அவர்கள் 4 பேரும், பகல் 11 மணிக்கு  நகராட்சி ஆணையரை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார். சங்க நிர்வாகிகளுடன், ஆணை யரை பிற்பகல் 1.45 மணிக்கு சந்தித்து, அரை மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில், நீக்கப்பட்ட 4 பேரை யும் ஒப்பந்ததாரரிடம் கேட்டு வேலை கொடுப்பதாகக் கூறப்பட்டது.  இதனால், ஜூலை 31 அன்று காலை மீண்டும் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதையடுத்து, காலை 8.15 மணிக்கு ஆணையர் வந்தார். அவருடன் நடந்த பேச்சுவார்த்தையில், சங்க நிர்வாகிகள் எஸ். ராஜேந்திரன், கே. வெங்கடேசன், மு. குருசாமி, எஸ்.சுதா, சத்தியா, திராவிடமணி ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் நீக்கப்பட்ட அனைவரையும் வேலை செய்ய அனுமதிப்பது என்றும்,  எஸ்.சுதாவைப் பணியிட மாறுதல் (2 ஆவது டிவிசன்) செய்வதாகவும் கூறினார். ஆனால், அதை சங்க நிர்வாகிகள் ஏற்க மறுத்தனர். இதையடுத்து, அவர், ஒப்பந்ததாரரிடம் தெரிவிப்பதாகக் கூறி னார். இதனால், வேலை நிறுத்தம் தொட ர்ந்தது. பின்னர் 10.50 மணிக்கு ஒப்பந்ததாரர் மேலாளர் நக்கீரன் தொலைபேசியில் பேசினார். அனை வருக்கும் வேலை கொடுப்பதாகவும், எஸ்.சுதாவுக்கு நாகூரிலேயே வேலை கொடுப்பதாகவும் உறுதி அளித்தார். இதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.  இது, தொழிலாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. இதைத் தொடர்ந்து, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர் சங்க நிர்வாகிகளுக்கு தூய்மைப்பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.