பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக ந.மிருணாளினி பொறுப்பேற்பு
பெரம்பலூர், ஆக. 30- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ், சர்க்கரை துறை கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சார் ஆட்சி யர் மிருணாளினியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்து வெள்ளியன்று அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தர விட்டுள்ளார். இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியராக ந.மிரு ணாளினி சனிக்கிழமை பொறுப்பேற்றார்.