tamilnadu

img

முதலமைச்சர் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற முதுகுளத்தூர் மாணவர்கள்

முதலமைச்சர் கோப்பை குத்துச்சண்டை போட்டியில்  பதக்கம் வென்ற முதுகுளத்தூர் மாணவர்கள் 

இராமநாதபுரம், செப்.10-  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் மதுரையில் நடைபெற்றன. இதில் இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட ஆறு மாவட்டங் களுக்கு மதுரை மண்டல அளவில் குத்துச் சண்டை போட்டி மதுரையில் நடைபெற் றது. இதில் இராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூர் டைகர் பாக்சிங் கோச்சிங் சென்டர் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மாணவர் யுவ தில்லை ராஜன்  38 முதல் 40 கிலோ போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார்.  44 முதல் 46 கிலோ குத்துச்சண்டை போட்டியில் மாணவர் சிவபாரதி,வெள்ளிப்பதக்கம் வென்றார்.  அக்டோபர் மாதம் சென்னை யில் நடைபெறுகின்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க முதுகுளத்தூர் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். பதக்கம் வென்ற மாண வர்களை பயிற்சியாளர்கள், மாணவர் கள், விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டினர்.