tamilnadu

img

சீமான் மீது நடவடிக்கை கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சீமான் மீது நடவடிக்கை கோரி  மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 21-  நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் தேவூரில், மாதர் சங்கத்தை தொடர்ந்து அவதூறாக பேசிவரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஞாயிறன்று, ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், மாவட்டச் செயலாளர் லதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டப் பொருளாளர் சுபாதேவி, ஒன்றியச் செயலாளர் வளர்மதி, ஒன்றிய தலைவர் கலையரசி, பொருளாளர் மாதவி, துணைத் தலைவர் பிரேமா, துணைச் செயலாளர் செல்வி உட்பட 25-க்கும் மேற்பட்டோர் சீமானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.