திருவள்ளூரில் சிறுமி கடத்தல் சம்பவம் குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி குழந்தைகள் ஆணையத் தலைவரிடம் மாதர் சங்கம் மனு
சென்னை, ஜூலை 24 - திருவள்ளூரில் சிறுமி கடத்தப் பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டு மென வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா உள்ளிட்டோர் தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத் தலைவர் விஜயாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் 4 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி கடந்த ஜூலை 12 ஆம் தேதி பள்ளி யில் இருந்து வீடு திரும்பும் வழியில் சில சமூக விரோதிகளால் கடத்தப் பட்டுள்ளார். மேலும் அக்குழந்தை மீது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சி நடைபெற்றுள்ளதாக தெரி கிறது. குழந்தை தான் கடத்தப்படும் போது கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிப்பதற்காக கடத்தல்காரர்களின் கண்களில் மண்ணை அள்ளி வீசி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த சமூக விரோதிகள் குழந்தையை தாக்கி வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். இதனால் குழந்தை கடுமையான காயங்களு டன் தப்பித்து தன் வீட்டுக்குச் சென்றுவிட்டது. கடுமையான காயங் களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பி உள்ளார். 14.5.25 அன்று மாதர் சங்க திரு வள்ளூர் மாவட்டச் செயலாளர் பத்மா தலைமையிலான ஒரு குழு, பாதிக் கப்பட்ட குழந்தையின் உறவினர் களை சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்தனர். பள்ளிச் சிறு மிக்கு நடந்த இத்தகைய வன்கொடு மைக்கு எதிராக ஆர்ப்பாட்டமும், மாவட்ட டி.எஸ்.பி-ஐ சந்தித்து மனு வும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை போக்சோ மற்றும் பாலியல் பலாத்கார முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து, 10 நாட்கள் ஆகியும் குற்ற வாளிகள் இதுவரை கைது செய்யப் படவில்லை. எனவே கடத்தல் உள்ளிட்ட வழக்குகளும் இதில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு 10 நாட்கள் ஆகி யும் குற்றவாளிகள் கைது செய்யப் படாதது கண்டிக்கத்தக்கது. உட னடியாக குற்றவாளிகள் யாராக இருந் தாலும் கைது செய்து, சட்ட ரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்தை கேட்டுக் கொள் கிறது. கிராமப்புற பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் சிசிடிவி கேம ராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பி யுள்ள அக்குழந்தைக்கும் குடும்பத் தாருக்கும் உரிய பாதுகாப்பும் தமிழக அரசின் சார்பில் நிவாரணத் தொகையும் உடனடியாக அளிக்க வேண்டும் என அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.