tamilnadu

img

மேலும் முன்னேறு பெண்ணே... - இயக்கம் : ஆல்பர்ட் நோப்ஸ்

இன்னுமொரு (சர்வதேச) மகளிர் தினம் கடந்து போயுள்ளது. பெண் விடுதலை, பாலின சமத்துவம் என்ற லட்சியங்களை நோக்கி இன்னும் பல நூற்றாண்டுகள் நாம் பயணிக்க வேண்டியது இருக்கலாம். இன்றைய முன்னேற்றத்திற்கே பல நூற்றாண்டுகள் ஆகியுள்ளது என்பது
தான் வரலாறு. வர

லாற்றை பின்னோக்கி ஆராய்கையில் பெண்கள் எத்தகைய அடிமைத்தனத்திற்கு ஆளாகியிருந்தனர் என்பது புரியும்.
20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை ரஷ்யா, சீனா, இந்தியா, கொரியா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் மட்டுமல்ல இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளும், பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளாகவே இருந்துள்ளன.

புரட்சியால் உரிமை...

தொழிற் புரட்சி, பிரெஞ்சு புரட்சி, ஜனநாயகப் புரட்சி, சோஷலிசப் புரட்சி என்று பல புரட்சிகளுக்குப் பின்னரே பெண்கள் தங்களுக்கான உரிமைகளை, சமத்துவத்தை நோக்கிய முன்னேற்றத்தை பெறத் துவங்கியுள்ளனர். 20-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஐரோப்பிய சமூகத்தில் பெண்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது. 
அவர்களின் வாழ்க்கைப்பாடு எத்தகையது என்பதை ஐரோப்பிய இலக்கியங்களும், அதனடிப்படையிலான சினிமாக்களும் பதிவு செய்துள்ளன. அத்தகைய இலக்கியங்களை படிக்கும்போதும், சினிமாக்களை பார்க்கும்போது தான் பெண்களின் அன்றைய அவலநிலையை நாம் அறிந்து கொள்ள முடியும். இந்தியாவிலும் அப்படியான இலக்கியங்கள், சினிமாக்கள் உண்டு.

‘‘மிஸ்டர் நோப்ஸ்’’

‘‘ஆல்பர்ட் நோப்ஸ்’’ ஒரு வித்தியாசமான திரைப்படம். 1927 இல் ஜார்ஜ் மூர் என்பவர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். 19-ஆம்  நூற்றாண்டின் இறுதியில் அயர்லாந்தின் டப்ளின் நகரத்தில் நிகழ்வதான கதை. ஆல்பர்ட் நோப்ஸ் டப்ளின் நகரத்தில் இயங்கி வரும் மாரிசன் என்ற பிரபலமான ஹோட்டலின் பணியாளர். ‘‘மிஸ்டர் நோப்ஸ்’’ என்று சக பணியாளர்களாலும், முதலாளி அம்மாவாலும், வாடிக்கையாளர்களாலும் அன்போடு அழைக்கப்
படுபவர்.. நேரம் தவறாமை, பணிவு, கனிவுடன் கூடிய சேவை அவருக்கு பாராட்டும், அதிக டிப்சும் (TIPS) கிடைக்க காரணமாக இருக்கிறது.
ஆல்பர்ட் நோப்ஸ்க்கு வேறு துணையோ, ஆதரவோ கிடையாது. தனக்கு கிடைத்த வரு
மானத்திலிருந்து 600 பவுண்டு பிரிட்டிஷ் பணம் சேமித்து விட்டார். சொந்தமாக ஒரு பிசினஸ் துவங்க வேண்டுமேண்டுமென்பது அவருடைய நீண்ட 
நாள் கனவு. தன்னுடைய சேமிப்பை யாருக்கும் 

தெரியாமல் தனது அறையில் ரகசியமாகப் பதுக்கி வைத்துள்ளார்.  அன்றைக்கு அது மிகப் பெரிய பணம். ஒரு நாள், ஹோட்டலுக்கு பெயிண்ட் வேலைக்கு வரும் மிஸ்டர் பேஜர் என்பவர் நோப்ஸின் அறையில் தங்க நேரிடுகிறது. அப்போது நோப்ஸ் ஒரு பெண் என்பதை  மிஸ்டர் பேஜர் கண்டுபிடிக்கிறார்.

பெண்களின் நிலை...

தான் பெண் என்பதை வெளி யில் சொல்லிவிட வேண்டாமென பேஜரிடம் மன்றாடுகிறார் மிஸ்டர் நோப்ஸ். தனது கதையையும் கூறுகிறார்.  பெற்றோர்கள் இறந்துவிட கிராமத்தி லிருந்து நகரத்திற்கு ஓடி வரும்  நோப்ஸ் ஐந்து ஆண்களால் கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார். ஒரு கேட்டரிங் நிறுவனத்திற்கு பணியாளர்கள் தேவைப்பட ஆண் வேடமிட்டுப் போய் உணவு பரிமாறும் பட்லர் வேலையும் பெறுகிறார்.
பல இடங்களிலும் வேலைபார்த்து, தற்போது மாரீசன் ஹோட்டல் பணியாளராக இருந்து வருகிறார். தான் ஒரு ஆண் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி அனைவரையும் நம்ப வைத்துள்ளார். துயரம் என்னவென்றால், மிஸ்டர் பேஜரும் ஒரு பெண். அவருக்கும் அப்படியொரு கதை இருக்கிறது. ஒரு பெண்ணாக அனுபவித்த தங்களது கடந்த கால வாழ்க்கையின் துயரங்களை இருவரும் பரிமாறிக் கொள்கின்றனர்.  
மிஸ்டர் நோப்ஸின் கனவு நிறைவேறியதா? என்பது நமது கண்களில் கண்ணீரை வரவழைக்கும் மீதிக் கதை! அன்றைய ஐரோப்பிய  பெண்களின் வாழ்க்கையை திரையில் பார்க்க அதிர்ச்சி அளிக்கிறது!.