விருதுநகரில் நகராட்சியில் மாதாந்திரக் கூட்டம் நடைபெறவில்லை அடிப்படை வசதிகள் செய்து தருவதில் சிக்கல்
விருதுநகர், செப்.30- விருதுநகர் நகராட்சியில் செப்டம்பர் மாதம் நடைபெற வேண்டிய நகர்மன்றக் கூட்டம் நடைபெறவில்லை. இதனால், பொதுமக்களுக்கான அடிப்படை வசதி கள் செய்து தருவதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது. விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் சுமார் ஒரு லட்சம் பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குப்பை சேகரிக்கும் பணி, தனியார் நிறு வனத்திடம் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இதேபோல் குழாய்கள் பழுது நீக்கும் பணிகளும் தனியார் மூலம் செய்யப்படு கிறது. மேலும், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப் படுகிறது. அதிலும் பல வார்டுகளுக்கு முழு மையாக தாமிரபரணி குடிநீர் கிடைக்க வில்லை. கழிவுநீர் வாறுகால் கட்டும் பணிக் காக பல்வேறு இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் சீரமைக்கப்பட வில்லை. பாதாள சாக்கடை அடைப்பு நீக்குவ தற்காக வாங்கப்பட்ட 2 ஜெட் ராடர் வாக னங்களும் பழுது ஏற்பட்டுள்ளன. மேன் வெல்களில் மண் அள்ளும் ஆட்டோ வாக னங்களும் பழுதாகி மதுரை சாலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நகர் முழுவதும் குப்பைகளை சேக ரிக்கும் பணிகள் சரிவர நடைபெறவில்லை. பகல் நேரத்தில் கடுமையான வெயில் அடித்த போதும், கொசுக்கள் குடியிருப்பு களுக்குள் புகுந்து அனைவரையும் கடித் துக் குதறுகின்றன. இப்படி மக்களுக்கான அடிப்படை வசதிகளுக்கான பிரச்சனை கள் ஏராளமாய் உள்ளன. ஆனால், விருதுநகர் நகராட்சியில் செப்டம்பர் மாதம் நடத்த வேண்டிய சாதா ரண மற்றும் அவசரக் கூட்டம் நடைபெற வில்லை. இதனால், நகர்மன்ற உறுப்பி னர்கள் தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகளை கூட்டங்களில் பேசி தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், ஆணையாளர் சுகந்தி, கோவில்பட்டி நகராட்சிக்கு மாற்றம் செய் யப்பட்டுள்ளார். கூடுதல் பொறுப்பாக விருதுநகர் நகராட்சியை கவனித்து வருகிறார். பொறியாளர் உடல்நலக் குறை வால் விடுப்பில் உள்ளார். செவ்வாயன்று தான் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இதன் காரணமாக மன்ற பொருள் ஏதும் தயார் செய்யவில்லை. எனவே, கூட்டம் நடத்தவில்லையென தெரிவிக்கின்றனர். நகர்மன்றத் தலைவரும் கூட்டம் நடத்து வதில் போதிய அக்கறை காட்டவில்லை. அதேவேளை, அனைத்து நகராட்சி களிலும் உள்ளாட்சி சட்டவிதிகளின்படி மாதத்தில் ஒருநாள் அவசியம் கூட்டம் நடத்த வேண்டும். ஆனால், விதிமுறை களைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு நக ராட்சி அதிகாரிகளும், நகர்மன்றத் தலை வரும் பொறுப்பற்ற முறையில் கூட்டம் நடத்தாமல் இருப்பது நியாயமல்ல. இது ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கும் செயல் என நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, இப்பிரச்சனையில் உடனடியாக தலையீடு செய்து மாதந்தோறும் நகராட்சி கூட்டம் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
