tamilnadu

img

துரத்தும் தோல்வி பயம் இலவசங்களை  அள்ளி வீசும் மோடி

துரத்தும் தோல்வி பயம் இலவசங்களை  அள்ளி வீசும் மோடி

பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறு கிறது. இந்த தேர்தலில் வாக்காளர் நீக்கம் செய்யப்பட்டாலும் தோல்வி பயத் தால் பாஜக தினமும் இலவச அறிவிப்பு களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமர் மோடி 75 லட்சம் பெண்களுக்கு கடன் இல்லா திட்டமாக ரூ.10,000 இலவ சமாக வழங்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து 25 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் பிரதமர் மோடியின் இலவச திட்டத்தில் ரூ.10,000 பெறும் பெண்களின் எண்ணிக்கை 1 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அடுத்தகட்ட இலவச அறிவிப்பாக இளைஞர்களுக்கு ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். “முக்கியமந்திரி நிச்சய ஸ்வயம் சஹாயத பட்டா யோஜனா” என்ற பெய ரிலான திட்டத்தை தொடங்கி வைத்த மோடி, இதன்கீழ் 5 லட்சம் பட்டதாரிகள் இலவச திறன் பயிற்சியுடன் இரண்டு ஆண்டுகளுக்கு தலா ரூ. 1,000 மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.