தனியார் நிறுவனங்களை வாழவைக்க விவசாயிகளை ஏமாற்றும் மோடி
அரசு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., கடும் விமர்சனம்
திண்டுக்கல், ஜூலை 18- தனியார் நிறுவனங்களை வாழ வைப்பதற்காக விவசாயிகளை ஏமாற்றுகிறது மோடி அரசு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., கடுமையாக விமர்சித்துள்ளார். விவசாய உற்பத்தியை அதிகரிக்க “பிரதமர் தன் - தானிய கிரிஷி யோஜனா” என்ற திட்டத்திற்கு 24,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்தத் திட்டம் 2025-26 ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளில் தனியார் துறைபங்களிப்புடன் செயல்படுத்தப்படும் எனவும் தெரி வித்துள்ளது. இதன் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த திட்டமானது ஏற்கனவே உள்ள 36 திட்டங்களை ஒருங்கி ணைத்து, புதிய திட்டமாக 100 பின்தங்கிய மாவட்டங்களில் அமல் படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள் ளது. இது புதிய திட்டங்கள் என்ற பெயரில் பழைய திட்டங்களை இணைத்து, தனியார் நிறுவனங்களை வாழ வைப்பதற்காக விவசாயிகளை ஏமாற்றும் நடவடிக்கை என திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பி னர் சச்சிதானந்தம் எம்.பி., சமூக ஊடகத்தில் கடுமையாக விமர்சித்துள் ளார். அவர் தெரிவித்திருப்ப தாவது: பிரதம மந்திரி தன் தானிய கிருஷியோஜனா (PMDDKY - Prime Minister Dhan-Dhaanya Krishi Yojana) என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என ஒன்றிய பாஜக அரசு பட் ஜெட்டில் அறிவித்தது. தற்போது ஒன்றிய அரசு செயல்படுத்துகிற 36 விதமான திட்டங்களை இணைத்து அதை 100 மாவட்டங்களுக்குள் சுருக்கி அதையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. விவசாயிகளின் நலன்களை பாதிக்கும் பழைய திட்டங்களை எல்லாம் இணைத்து அதற்கு, புதிய பெயர் சூட்டி இந்தியா முழுவதும் செயல்பட்ட திட்டங்களை 100 மாவட்டங் குளுக்குள் சுருக்கி இந்தியா முழுமைக்கு மான திட்டங்களை குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கொடுப்பது விவசாயிகளின் நலன்களை பாதிக்கும் என விமர்சித்துள்ளார். மேலும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, இன்றுவரை விவசாயிகளின் பிரதான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட உறுதிப்படுத்த வில்லை. அதற்கு பதிலாக, புதிய திட்டங்கள் என்ற பெயரில் பழைய திட்டங்களை இணைத்து விவசாயி களை ஏமாற்றக்கூடிய வேலையை மட்டுமே செய்து வருகிறது என பாஜக அரசாங்கத்தைச் சாடியுள்ளார்.