tamilnadu

img

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கும் மோடி அரசு 10 ஆண்டுகளில் ரூ.7.41 லட்சம் கோடி வரி இழப்பு

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கும் மோடி அரசு  10 ஆண்டுகளில் ரூ.7.41 லட்சம் கோடி வரி இழப்பு

ஆர்.சச்சிதானந்தம்  எம்.பி., கடும் கண்டனம் புதுதில்லி, பிப்.8 - ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையினால், கடந்த  எட்டு ஆண்டுகளில் மட்டும் இந்திய அரசுக்கு சுமார் 7 லட்சத்து 41 ஆயி ரத்து 226 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சாமானிய மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றி விட்டு, பெருநிறுவனங்களுக்கு வரித் தள்ளுபடி செய்வதையே இந்த அரசு  நோக்கமாகக் கொண்டுள்ளது என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பி னர் ஆர்.சச்சிதானந்தம் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் ஆர்.சச்சி தானந்தம் மற்றும் பதான் யூசுப் ஆகி யோர் எழுப்பிய கேள்விக்கு (கேள்வி எண்: 373), நிதித்துறை இணை அமைச் சர் பங்கஜ் சவுத்ரி தாக்கல் செய்த பதி லில் இந்த அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரிக்குறைப்பு என்ற பெயரில் சலுகை மழை 2014-ஆம் ஆண்டு மோடி அரசு  பொறுப்பேற்றது முதல், கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கான வரி விகி தங்கள் தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டு  வந்துள்ளன. 2015-16 வரவு செலவுத்  திட்டத்தில் 30 சதவீதமாக இருந்த  கார்ப்பரேட் வரி 25 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து, 2016 முதல் பல்வேறு கட்டங்களாக சிறு மற்றும் பெரு நிறுவனங்களுக்கு வரிச்  சலுகைகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, 2019 செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட வரிச் சட்ட திருத்தத் தின் மூலம் (Taxation Laws Amendment Act, 2019), புதிய உற்பத்தி  நிறுவனங்களுக்கு வெறும் 15 சத வீத வரி (கூடுதல் கட்டணங்களுடன்  17.16%) மட்டுமே நிர்ணயிக்கப்பட் டது. அதேபோல், உள்நாட்டு நிறுவனங் களுக்கான அடிப்படை வரி 22 சத வீதமாக (கூடுதல் கட்டணங்களுடன் 25.17%) குறைக்கப்பட்டது. வெளி நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு  வந்த 40 சதவீத வரியும் தற்போது 35 சத வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.7.41 லட்சம் கோடி வருவாய் இழப்பு அரசு தாக்கல் செய்துள்ள புள்ளி விவரங்களின்படி, 2016-17 முதல்  2023-24 வரையிலான காலகட்டத்தில்  மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிச் சலுகைகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு பின்வருமாறு: நிதியாண்டு    வருவாய் இழப்பு (ரூபாய் கோடியில்) 2016-17    86,144 2017-18    93,642 2018-19    1,08,113 2019-20    94,109 2020-21    75,218 2021-22    96,892 2022-23    88,109 2023-24 (மதிப்பீடு)    98,899 மொத்தம்    7,41,226 கோடி  மக்களிடம் பறித்து கார்ப்பரேட்களுக்குத் தரும் அவலம் மறுபுறம், நாட்டின் மொத்த நேரடி வரி வசூலில் கார்ப்பரேட் வரியின் பங்கு படிப்படியாகக் குறைந்து வரு வதை புள்ளிவிவரங்கள் காட்டு கின்றன. 2014-15 நிதியாண்டில் 61.65 சதவீதமாக இருந்த கார்ப்பரேட் வரியின் பங்கு, 2024-25 நிதியாண்டில் 44.32 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது, அரசுக்குத் தேவையான வருவாயைப் பெருநிறுவனங்களிடம் இருந்து பெறுவதைக் குறைத்துக் கொண்டு, வருமான வரி மற்றும் இதர வரிகள் மூலம் சாமானிய மக்க ளின் பாக்கெட்டிலிருந்து அரசு தட்டிப் பறிக்கிறது. ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கடும் விமர்சனம் இந்தத் தரவுகள் குறித்து கருத்து  தெரிவித்துள்ள ஆர்.சச்சிதானந்தம், “வேலைவாய்ப்பைப் பெருக்கு கிறோம், முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற  போலி காரணங்களைக் கூறி, தனது நண்பர்களான கார்ப்பரேட் முதலாளி களுக்கு மோடி அரசு பல லட்சம் கோடி ரூபாயைத் தாரை வார்த்துள்ளது. 7.41 லட்சம் கோடி ரூபாய் என்பது சாதாரணத் தொகையல்ல; இது நாட்டின் கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுநலத் திட்டங்களுக்குப் பயன் படுத்தப்பட்டிருக்க வேண்டிய மக்க ளின் பணம். கார்ப்பரேட்களுக்கு வரித்  தள்ளுபடி செய்யும் அதே வேளை யில், ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும்  அத்தியாவசியப் பொருட்கள் மீது  ஜிஎஸ்டி (GST) விதித்து மக்களை வாட்டி வதைப்பது இந்த அரசின் மக்கள் விரோத முகத்தை அம்பலப் படுத்தியுள்ளது,” எனச் சாடியுள்ளார். மேலும், செஸ் வரி மற்றும் கூடுதல்  கட்டணங்கள் மூலம் மாநிலங்களுக்குச்  சேர வேண்டிய வரிப்பகிர்வையும் ஒன்றிய அரசு தந்திரமாகத் தடுத்து வரு வதாக அவர் சுட்டிக்காட்டினார்.