tamilnadu

img

தெற்கு ரயில்வேயில் கொடூரமாக இந்தியை திணிக்கும் மோடி அரசு!

தெற்கு ரயில்வேயில் கொடூரமாக இந்தியை திணிக்கும் மோடி அரசு!

சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

மதுரை, ஆக. 26 - தெற்கு ரயில்வே மூலம் மிகக்கொடூரமான இந்தித் திணிப்பில் அமித் ஷா தலை மையிலான குழு இறங்கியிருப்பதாக மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரி வித்துள்ளார். இந்த திணிப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுவிநியோக திட்ட கலந்தாலோசனைக் கூட்டத் திற்குப் பின், சு. வெங்கடேசன் எம்.பி. செய்தியா ளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர்  கூறியதாவது: “தெற்கு ரயில்வேயில் ஒரு சுற்றறிக்கை, இந்தித் திணிப்பை ஒன்றிய பாஜக அரசு எவ்வ ளவு பட்டவர்த்தனமாக செய்து கொண்டிருக் கிறது என்பதற்கு அடையாளமாக உள்ளது. கடந்த  வாரம் தெற்கு ரயில்வேயில் ஊழியர்கள் பதவி உயர்வுக்கான தேர்வு நடைபெற்றது. அதில் ஆங்கி லம், இந்தி மற்றும் மாநில மொழிகள் இருக்க வேண்டும் என்பது அடிப்படையான விதி. ஆனால்  தெற்கு ரயில்வே நடத்திய அந்த பதவி உயர்வுக் கான தேர்வின் வினாத்தாளில் ஆங்கிலம் மற்றும்  இந்தி மட்டுமே இருந்தது. தமிழ்மொழி இல்லை.  தேர்வு நடந்து முடிந்துவிட்டது. இந்த தேர்வுக்கு எதிராக ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். உடனடியாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். தமிழில் வினாத்தாள் தயாரித்து தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரியிருக்கிறேன். அந்த தேர்வு  ரத்து செய்யப்படுவதற்கான முடிவு ஒன்றிரண்டு  நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க் கின்றேன். தொடர்ந்து தெற்கு ரயில்வேயில் அடுத்த சுற்றறிக்கை வெளிவந்துள்ளது. இந்தியில் பயிற்சி  மற்றும் ஆளுமையை வளர்த்துக் கொள்ள அலு வலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்தி மொழியறிவு என்பது பதவி உயர்வுக்கான ஒரு தகுதியாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்  என்று சொல்லப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு இந்தி  திணிப்பை எந்தெந்த வகைகளில் எல்லாம் மேற் கொள்கிறது என்பதற்கான இன்னொரு அடை யாளம் தான் இது. குறிப்பாக, ஒன்றிய ஆட்சி மொழி சட்டம், அலுவல் மொழி சட்டம் ஆகிய அனைத்தையும் அப்பட்டமாக மீறி, உள்துறை அமைச்சர் அமித் ஷா  தலைமையிலான குழு – இந்தி பேசாத மாநிலங்கள்  மீது, குறிப்பாக ஒன்றிய அரசின் அலுவலகங்கள், ரயில்வே, அஞ்சல், வங்கி, இன்சூரன்ஸ் என்று அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் மிகக் கொடூரமாக இந்தியை திணிக்கும் வேலையை  செய்து வருகிறது. தமிழ்நாடு அதற்கு விதிவிலக்கு பெற்ற மாநிலம். ஆட்சி மொழி சட்டத்தில் விதிவிலக்கு பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு. எனவே தான் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தி செல்கள்  கலைக்கப்பட வேண்டும் என்று சொல்கிறோம். இன்றைக்கு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட வேண்டும் என்று கடுமையாக என் கண்டனத்தை பதிவு செய்கிறேன். இன்னும் சொல்லப்போனால், மொழிப் பிரச்சனை என்பது அலுவலகம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. சமீபகாலங்களில் ரயில்வேயில் நடை பெற்ற பல விபத்துகளுக்கான முக்கியக் காரணம்,  அந்த மாநில மொழி தெரியாத ஊழியர்கள் பணி யில் இருப்பதும் ஒரு காரணமாகும். மாநில மொழி யறிவு என்பது மிக முக்கியமானது. எனவே இந்தித்  திணிப்பை அறவே கைவிட வேண்டும் என்பதை  நான் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. கூறி யுள்ளார்.