8 ஆண்டாக மக்களைத் தண்டித்ததை ஒப்புக்கொண்டது மோடி அரசு
ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் குறித்து, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைத்திருப்பதை மக்களுக்கான தீபாவளி பரிசு என்று மோடி வர்ணித்திருக்கிறார். உலகிலேயே அதிகமாக வரி வசூலிக்கும் நாடு இந்தியா என்று டிரம்ப்பே விமர்சிக்கும் அளவுக்கு வரி என்ற பெயரில் மக்களை வாட்டி வதைத்தவர் தான் பிரதமர் நரேந்திர மோடி என்பதை மறந்து விட முடியாது. அதிகப்படியான கொள்ளை வரியின் காரணமாக விலைவாசி உயர்ந்து பெரும் பகுதி மக்கள் மூச்சுவிட முடியாத நிலையை அனுபவித்ததை அறிவோம். இந்தப் பின்னணியில், ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்ததன் விளைவு தான் தற்போதையக் குறைப்பு. வரியைக் குறைத்தது பரிசு என்றால், முன்பு அதிக வரி விதித்தது மக்களுக்கான தண்டனை தானே?” என்று பெ.சண்முகம் கேட்டுள்ளார்.