tamilnadu

img

பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைப்பில் மோடி அரசு நாடகம்

சென்னை, மே 26 - பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் மோடி அரசு நாடகமாடு கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சாடினார். மோடி அரசின் நாசகர கொள்கை களுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்திடவும் வலி யுறுத்தி மே 25-31 வரை தேசம் முழு வதும் இயக்கம் நடத்த இடதுசாரி  கட்சிகள் அறைகூவல் விடுத்துள் ளன. இதன் ஒருபகுதியாக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத் த்தைகள் கட்சியும் இணைந்து வியாழ னன்று (மே.26) திருவான்மியூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது  ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களி டம் கூறியதாவது: ஒன்றிய அரசின் விலைவாசி உயர்வுக் கொள்கையை வீடுவீடாகச் சென்று துண்டு பிரசுரம் கொடுத்து அம்பலப்படுத்துவோம். கடந்த 2 மாதத்தில் பெட்ரோல் விலையை 11 ரூபாய் உயர்த்திவிட்டு 9 ரூபாய் மட்டுமே குறைத்து நாடகமாடுகிறது.

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வினால் சங்கிலித் தொடர் போல அத்தியாவசியப் பொருட் களின் விலை றெக்கை கட்டிப் பறக் கிறது. பெட்ரோலியப் பொருட் களின் விலை குறைந்தாலே அத்தியா வசியப் பொருட்களின் விலை குறையும். ஒன்றிய அரசு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாமல், மக்களைப் பற்றி கவலைப்படாமல் செயல்படுகிறது. மக்களிடம் எழும் அதிருப்தியை திசைதிருப்ப சிறு பான்மை, பட்டியலின மக்களை தாக்கு கிறது. மாட்டிறைச்சி வைத்திருந் தார்கள் என அடித்துக் கொல்கிறது.  மக்களை மத ரீதியாக பிளவுபடுத்து கிறது. ஒன்றிய அரசு 28 ஆயிரம் கோடி ரூபாயை மாநில அரசுக்கு வழங்கா மல் நிலுவை வைத்துள்ளது. இதனை வழங்க வலியுறுத்துகிறோம். பெட்ரோல் - டீசல் மீதான வரிகளை முற்றாக ரத்து செய்ய வேண்டும். ஏழை குடும்பங்களுக்கு மாதம் 7500 ரூபாய் வழங்க வேண்டும். 1991ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டத்தின்படி, 1947க்கு  முன்பு மத வழிபாட்டு தலங்கள் எந்த  நிலையில் இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வேலையில்லாக் கால நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜி.ராமகிருஷ்ணன், “ராமநவமி, அனுமன் ஜெயந்தி கொண்டாடிய இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை, குடியிருப்புகளை தாக்கினர். ஆனால் மதுரையில் நடைபெற்ற அழகர் திருவிழாவில் சிறு அசம்பாவிதம் கூட நிகழவில்லை. இது பக்தி, அது உத்தி. இத்தகைய வன்முறையை சங்பரிவாரம் கைவிட வேண்டும்” என்றார்.

“அதானி - அம்பானி போன்ற பெருமுதலாளிகள் வங்கிகளில் இருந்து வாங்கிய 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான  கடனை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. அதாவது அந்த பணத்தை ஒன்றிய அரசு வங்கிகளுக்கு கொடுக்கிறது.  முதலாளிகளுக்கு செலவிடும் அரசு பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியைக் குறைத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். கார்ப்பரேட், மதவாத சக்திகள் இணைந்த இந்த அரசு அதைச் செய்ய மறுக்கிறது” என்றும் அவர் சாடினார். இப்போராட்டத்திற்கு சிபிஎம் வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வனஜகுமாரி, எஸ்.குமார், சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ஜெயவேல், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.விஜயகுமார், விசிக மாநில தலைமை நிலையச் செயலாளர் இளஞ்சேகுவேரா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சத்யா, மாவட்ட துணைச் செயலாளர் வளவன் உள்ளிட்டோர் பேசினர்.

;