1 லட்சம் ஏக்கரில் மாலிப்டினைட் சுரங்கம் தோண்டத் திட்டம் மோடி அரசால் பழனி மலைக்கு ஆபத்து!
திண்டுக்கல், ஜூலை 2 - அரிட்டாபட்டி பகுதியில் சுரங்கம் தோண்டும் சதி முறியடிக்கப்பட்ட பின்னணியில், ஒன்றிய பாஜக அரசு தற்போது பழனி மலையை குறி வைத்து 1 லட்சம் ஏக்கரில் மாலிப்டி னைட் சுரங்கம் தோண்ட திட்டமிட்டி ருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எம்.பி. தமது சமூகவலைத்தளப் பக்கத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “இந்திய புவியியல் ஆய்வு மையத் தின் (Geological Survey of India) 10 ஆண்டு கால ஆய்வில் பழனி மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் மாலிப்டினைட் (Molybdenite) கனிம வளம் இருப்பது கண்டறியப் பட்டதாக செய்திகள் தெரிவிக் கின்றன. பழனி மலை மற்றும் சுற்று வட் டாரப் பகுதிகளான இடும்பன் மலை, ஐவர் மலை, நெய்க்காரப்பட்டி, கரடிக் குட்டம், சத்திரப்பட்டி ஆகிய இடங்க ளில் 1 லட்சம் ஏக்கரில் மாலிப்டினம் (Molybdenum) கனிம வளத்தை ஒன்றிய அரசு ஆய்வில் கண்டறிந் துள்ள நிலையில் சுரங்க திட்டத் திற்கும் தயாராகி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரப் பகுதிகளான இந்த பகுதிகள் மிகப்பெரிய பல்லுயிர் தளமாகவும், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகவும், சமணப் படுகைகள் உள்ள பகுதிகளாகவும் உள்ளன. கடந்தாண்டு, அழகர் மலைப் பகுதிகளான அரிட்டாபட்டி, நாயக்கர் பட்டி உள்ளிட்ட பகுதிகளை வேதாந் தாவின் கொள்ளை லாபத்துக்கு பலி யிடத் துணிந்த ஒன்றிய பாஜக அரசு, இந்தாண்டு பழனி மலைக்கு வந்துள்ளது. ஒன்றிய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அழகர் மலையும் எங்கள் மலை தான், பழனி மலையும் எங்கள் மலை தான். ஒரு நாளும் ஒன்றிய பாஜக அரசின் வேட்டைக்காடாக மாற்ற அனுமதிக்க மாட்டோம். அழகர் மலையும், பழனி மலை யும் எங்கள் மலைதான்....!” இவ்வாறு ஆர். சச்சிதானந்தம் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.