மதுரையில் மத நல்லிணக்கம் விநாயகர் கோவிலுக்கு சீர்வரிசை செய்த சிறுபான்மை மக்கள் நலக்குழு
மதுரை, ஆக. 30- மதுரை மாவட்டம் கோ.புதூர் அருகே உள்ளது சூர்யா நகர். அங்குள்ள சந்தோஷ் நகர் குடியி ருப்போர் நல சங்கத்தின் சார்பில் சந்தோஷ் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆக. 29) அன்று காலை 9 மணி அள வில் நடைபெற்றது. இந்த கும்பா பிஷேக நிகழ்வில் தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் சூர்யா நகர் கிளையின் சார்பில் தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் தாம்பூலத்துடன் சீர் வரிசை செய்யப்பட்டது. கிளை தலைவர் எஸ்.சண்முக வேல், செயலாளர் எஸ்.முஜிபூர் ரகு மான் ஆகியோர் தலைமையில் நடை பெற்ற சீர் வரிசை நிகழ்ச்சியில் மாநகர் மாவட்டத் தலைவர் கே.அலாவுதீன், மாவட்டச் செயலாளர் என்.கணேச மூர்த்தி, மாவட்ட பொருளாளர் எம். ஜான்சன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் டி.கல்யாணசுந்தரம், எல்.லாவண்யா குணசேகரன், அல் அமீன் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர் சேக் நபி மற்றும் சூர்யா நகர் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் நிர்வாகம் மற்றும் சூர்யா நகர் பகுதி மக்கள் சார்பில் மத நல்லிணக்கத்தை போற்றுவோம் என கூறி வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்றனர். குறிப்பாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் சால்வை அணிவித்தும் கோவில் நிர்வாகம் விழாவில் மத பாகுபாடின்றி கலந்து கொண்டவர்களை கவுர வப்படுத்தியது.