tamilnadu

img

12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதரவற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர்கள் பாராட்டு 

மயிலாடுதுறை, ஜூன் 24 - மயிலாடுதுறை அறிவகம் குழந்தை கள் நல காப்பகத்தில் விடப்பட்ட, பிறவி யிலேயே இரண்டு கைகளும் இல்லாத, பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி த.லெட்சுமி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 277 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து மாண வியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மாணவியை பாராட்டிய பின்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செய்தி யாளர்களிடம் பேசியதாவது: “அன்பு சகோதரி லெட்சுமி 12 ஆம் வகுப்பு கணக்குப் பதிவியல் பிரிவில் 277 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். உயர்கல்வி பெறுவதற்கு  தகுதி பெற்றிருக்கிறார். இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். தேர்வா னார் என்ற மகிழ்ச்சியை காட்டிலும் தன் னம்பிக்கைக்கு உதாரணமாக விளங்கு கிறார். மாணவர்கள் தேர்ச்சி பெறுவ தற்கு காரணமாக இருக்கிற செயலர், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.  நடைபெற்ற 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது தவறான முடிவு; இது மிகுந்த வேதனையையும் மனவலியையும் தரு கிறது. பெற்றோர்கள் மிகுந்த துன்பப் பட்டு தங்களது குழந்தைகளை வளர்க்கி றார்கள். உங்களை தேர்ச்சி பெற வைப்பதற்கு ஆசிரியர்கள் பாடுபடுகி றார்கள். இன்றைய இளைய தலை முறையினரின் தன்னம்பிக்கைக்கு மாணவி லெட்சுமி உதாரணமாக விளங்குகிறார்.

முதலமைச்சர் சொல்வது போல ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு  திறமைகள் உள்ளது. அதனை வெளிக் கொண்டு வருவதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசாங்கம் இணைந்து, ‘நான் முதல்வன்’ திட்டத்தை கொண்டு வந்தனர். தேர்வில் தேர்ச்சி பெறாதவர் கள் உடனடியாக ஜூலை மாதம் தேர்வெழுதி, இந்த ஆண்டிலேயே உயர்கல்வியில் சேர அரசாங்கம் வழிவகை செய்திருக்கிறது.  14417 என்ற எண்னை தொடர்பு கொண்டால், கல்வி சம்பந்தமான பல ஆலோசனைகள் வழங்கப்படும். 1098 என்ற எண்னை தொடர்பு கொண்டு உயர் கல்வி பயில ஆலோசனை பெறலாம். மாணவி லெட்சுமிக்கு மாவட்ட ஆட்சிய ரிடம் ஆலோசித்து தேவையான உதவிகள் செய்து தரப்படும்”. இவ்வாறு அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் சோ. முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, மயிலாடு துறை நகர்மன்ற தலைவர் என்.செல்வ ராஜ், அறிவகம் குழந்தைகள் நல காப்ப கத்தின் செயலர்கள் கலாவதி-ஞான சம்பந்தம், தலைமையாசிரியர்கள், மாணவ-மாணவிகள், அரசு வழக்கறி ஞர்கள் தனிகை பழனி, அருள்தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;