tamilnadu

பொங்கல் பரிசு முறைகேடு குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலடி

பொங்கல் பரிசு முறைகேடு குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலடி

ராணிப்பேட்டை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறை கேடு நடந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதற்கு எதிர்வினையாற்றிய  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, “எடப்பாடி பழனிசாமி மனநிலை சரியில்லாதவர் போல பேசி வருகிறார்” என விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் முத்துக்கடை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற “மக்களைக் காப்போம்  - தமிழகத்தை மீட்போம்” என்ற பரப்புரையின் போது எடப்பாடி  பழனிசாமி, “பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் வேட்டி-சேலை விநியோகத்தில் முறைகேடு நடந்துள்ளது” என குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.காந்தி, “திமுக ஆட்சிக்கு வந்த பிறகே, பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் உடைகளை மக்கள் ஆர்வத்துடன் பயன் படுத்தி வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக தரமான,  பல வண்ணங்களிலான உடைகளை சரியான நேரத்தில் வழங்கி வருகிறோம். அதிமுக ஆட்சியின் போது செப்டம்பர்  மாதம் வரை வேட்டி - சேலைகள் தாமதமாக வழங்கப்பட்டு உள்ளன” என தெரிவித்தார்.