அரியலூரில் 7 புதிய புறநகர் பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்
அரியலூர், ஆக. 6 - அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் நக ராட்சி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் சார்பில் கிளாம்பாக்கம், சிதம்பரம், மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய பகுதி களுக்கு 07 புதிய BS VI புற நகர் பேருந்துகளை போக்கு வரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதன்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தின சாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் சிவ சங்கர் தெரிவிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளாக இயக்குவதன் அடிப்படை யில், ஏறத்தாழ 5000 பேருந்துகளை நெருங்கு கின்ற அளவிற்கு புதிய பேருந்துகள் அறிமுகப் படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக் குள் பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்து கள் செயல்பாட்டிற்கு வரும்” என்றார்.