tamilnadu

முதியோர் ஓய்வூதியம்: குடும்பஅட்டை ரத்தாகாது!

சென்னை, மார்ச் 22- தமிழ்நாடு சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது பேசிய சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக உறுப்பினர் பிரபாகர ராஜா, ”தமிழ் நாட்டில் முதியோர் ஓய்வு ஊதியம் பெற்று வரும் பயனா ளிகளின் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்று கூறப்படு கிறது அது உண்மையா? என்றார்.  இதற்கு பதிலளித்த உணவுத் துறை அமைச்சர் சக்கர பாணி,”ஓஏபி என்று அழைக்கப் படும் முதியோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளின் குடும்ப அட்டை ஒருபோதும் ரத்து செய்யப்பட மாட்டாது என்றார். தமிழ்நாட்டில் தனிநபர் குடும்ப அட்டை வழங்க அரசு முன்வருமா? என  எழும்பூர் தொகுதி திமுக உறுப்பினர் பரந்தாமன் எழுப்பிய வினாவுக்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, “ ஒரு நபர்  மட்டுமே தனியாக வசித்து வரும் நபர்களுக்கு ஏற்கனவே அட்டை கள் வழங்கப்பட்டு வருகிறது. அத்தகைய நபர்களுக்கு மாதம்தோறும் 12 கிலோ அரிசியும் ஒரு கிலோ பாமாயில் ஒரு கிலோ துவரம் பருப்பு அரை கிலோ சக்கரையும் வழங்கப்படுகிறது. மேலும் வயதானவர்கள் ரேசன் கடைகளுக்கு வந்து பொருட்கள் வாங்க முடியவில்லை என்றாலும் அவர்களது சார்பாக அவரது உறவினர்கள் வாங்கிக் கொள்ள வும் அரசு ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறது என்றும் தெரி வித்தார். மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ”திமுக ஆட்சி பொறுப்பேற்ற பத்து மாத காலத்தில் சுமார் 15 லட்சத்து 74 ஆயிரம் பேர் புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அந்த மனுக்களை பரிசீலித்து தகுதி உள்ள நபர்களுக்கு 15 நாட்களு க்குள் சுமார் 11 லட்சம் குடும்ப அட்டைகள் புதிதாக வழங்கப் பட்டு இருப்பதாகவும் தெரி வித்தார்.