tamilnadu

img

பள்ளி தலைமையாசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வுக் கூட்டம்

பள்ளி தலைமையாசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வுக் கூட்டம்

பெரம்பலூர், செப்.11- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாநில அளவிலான அடைவுத்தேர்வு-2025 குறித்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டம் பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக மாநில அடைவுத்தேர்வில் முன்னேற்றமடைய என்னென்ன செய்ய வேண்டும், தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து பள்ளி தலைமையாசிரியர்களிடம் கேட்டறிந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  விரிவாக ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ச.வைத்தியநாதன், வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் முனைவர் செ.அமுதவல்லி மற்றும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.