tamilnadu

img

பூதலூர் அருகே மினி பேருந்து துவக்க விழா

பூதலூர் அருகே  மினி பேருந்து  துவக்க விழா

தஞ்சாவூர், ஜூலை 16-   தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம், கழுமங்கலம் கிராமத்திலிருந்து பூண்டி மாதா கோவில் வரை புதிய வழித்தடத்தில், பூண்டி மாதா என்ற புதிய மினி பேருந்து துவக்க விழா புதன்கிழமை கழுமங்கலத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில், மினி பேருந்து உரிமையாளர் ரங்கராஜன், மைக்கேல்பட்டி பங்குதந்தை இன்பராஜ், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர்.ரவிசந்தர், சிபிஎம் திருவையாறு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.ராம், கழுமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.காசி அய்யா, சிபிஎம் கழுமங்கலம் கிளைச் செயலாளர் ஏ.ஆரோக்கியசாமி, வரகூர் கிளைச் செயலாளர் எம். சௌந்தரராஜன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.