tamilnadu

img

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

சேலம், அக். 23 - மேட்டூர் அணைக்கு கடந்த இரண்டு நாள்களாக விநாடிக்கு 35,000 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, வியாழனன்று (அக். 23) மாலை 6 மணிக்கு விநாடிக்கு 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடி யாக உள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி யில் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதி கரித்து வருவதால் விநா டிக்கு 60,000 கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் மேட்டூர் அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ஸ்டான்லி, காவிரி கரை யோர மாவட்டங்களுக்கு 5-ம் கட்டவெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், மயி லாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.