tamilnadu

நிதி ஒதுக்கீட்டில் குளறுபடி.... மக்கள் பிரதிநிதிகளை சமாளித்த மாநகராட்சி ஆணையர்

மதுரை:
மதுரையின் வளர்ச்சிப் பணிகள் குறித்த கூட்டம் திங்களன்று நடைபெற்றது. அப்போது மாநகராட்சி பொறியாளர் சமர்ப்பித்த அறிக்கையில் திட்டப் பணிகளுக்கான செலவினங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். 

மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் பேசுகையில், கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி பெரியார் பேருந்து நிலையப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு 159 கோடியாக இருந்தது. தற்போது 167 கோடியாக உள்ளது ஆறு மாதங்களுக்குள் எப்படி இது கூடும். எல்இடி விளக்குகள் அமைப்பதற்கு 20 கோடி ரூபாய் என மத்திய அரசு கூறியுள்ளது 90 சதவீத பணிகள் முடிந்தும் மீண்டும் 20 கோடி ரூபாய் கணக்கில்வருகிறது. சரியான ஆவணங் களை மாநகராட்சி சமர்ப்பிக்க வேண்டுமென்றார். 

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்,கடந்த ஆறு மாதங்களாக பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தாமதத்திற்கான காரணம் அறிக் கையில் இல்லை. கொரோனா ஊரடங்கு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளைஅறிக்கையில் தெளிவுபடுத்தவில்லை என்றார்.விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்100 மையங்களில் நடைபெறுகிறது மதுரையில் மட்டும் தாமதமாக நடைபெறுகிறது திட்டங் களுக்கான அறிக்கை சரியாக இல்லை சரியான முறையில் கொடுத்தால் தான் மத்திய அமைச்சரிடம் கூற முடியும் எனவே கனவுத்திட்டங்கள் போல் அறிக்கை கொடுக்காமல் சரியான முறையில் அறிக்கை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.மக்களவை பிரதிநிதிகளின் கேள்விக்கு பதிலளித்த ஆணையாளர் விசாகன், அறிக்கையை இறுதிப்படுத்தி ஓரிரு நாளில் வழங்குவதாக உறுதியளித்தார்.

;