சென்னை,டிச.12- டிசம்பர் 18-ம் தேதி சென்னை யில் திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:- திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் தலைமையில், திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’’. இவ்வாறு தெரிவித்துள்ளார். விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.