tamilnadu

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவிடம் போராட்டக் குழு வலியுறுத்தல்

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு  தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவிடம் போராட்டக் குழு வலியுறுத்தல்

சிவகங்கை, செப்.19- சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை  புரிந்த சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு தொழிற் சாலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் முழு வதுமாக பணியை நிறுத்தக் கோரி போராட்  டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மனித குலத்தை அழிக்  கும் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு தொழிற்  சாலை தொடங்கக்கூடாது  என்பதை வலி யுறுத்தி நடைபெற்ற முற்றுகை போராட் டத்தையடுத்து 2 மாதத்தில் பூட்டப்படும் என்றும், அதுவரை பணிகள் எதுவும் நடை பெறாது என்றும் எழுத்துப்பூர்வமாக எழு திக் கொடுத்துள்ளனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்  திற்கு வருகை புரிந்த சட்டமன்ற மதிப் பீட்டுக் குழு தலைவர் காந்திராஜிடம் போரா ட்டக் குழு சார்பாக போராட்டக் குழு கன்வீ னர் வீரபாண்டி, சிபிஎம் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, ஒன்றி யச் செயலாளர் முனியராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் மெய்யப்பன் ஆகியோர் மனு  அளித்தனர்.