tamilnadu

img

மாதர் சங்க மூத்த தலைவர் ஆர்.சாவித்திரி காலமானார்

வேலூர், ஜன. 16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட மூத்த தோழரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னாள் மத்தியக்குழு உறுப்பின ருமான ஆர்.சாவித்திரி உடல் நலக் குறைவால் திங்களன்று (ஜன.16) கால மானார். அவருக்கு வயது 82. மறைந்த தோழரின் உடல் அஞ்சலிக்காக 8/25, விஜய ராகவபுரம் போஸ்டல் காலனி, சத்துவாச்சாரி, வேலூர் என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு சிபிஎம், மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதி நிகழ்ச்சி செவ்வாயன்று (ஜன. 17) நடைபெற உள்ளது.