இன்று தியாகிகள் தினம் கடைப்பிடிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் வியாழனன்று (ஜூலை 17) தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது. காலை 9.30 மணிக்கு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கர லிங்கனார், தியாகி செண்பகராமன் ஆகியோர் சிலைகளுக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற தியாகி களின் நினைவாக 1998 ஆம் ஆண்டு தியாகிகள் மணிமண்ட பம் திறந்து வைக்கப்பட்டது. தியாகி ஆர்யா பாஷ்யம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் பிரிட்டிஷ் கொடியை இறக்கி, இந்திய தேசியக் கொடி ஏற்றிய மாவீரர் ஆவார். தியாகி சங்கர லிங்கனார் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை பெற 79 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்த்தியாகம் செய்தார். தியாகி செண்பகராமன் ‘ஜெய்ஹிந்த்’ முழக்கத்தை முதன் முதலில் எழுப்பியவர் மற்றும் இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர் ஆவார்.
கலைஞர் சிலை மீது கருப்பு மை பூசிய விவகாரம்: மருத்துவர் கைது
சேலம்: சேலம் நான்கு ரோடு, அண்ணா பூங்கா அருகே கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வரும் கரு ணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டிருந்தது. மேலும், சிலைக்கான அடி பீடம் முழுவதும் கருப்பு பெயிண்ட் பூசப்பட்டிருந்தது. இதுகுறித்து திமுக மாநகரச் செயலாளர் ரகுபதி அஸ்தம் பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் நட வடிக்கை மேற்கொண்ட போலீசார், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், வயதான நபர் ஒருவர் கையில் பெயிண்ட் டாப்பாவுடன் சென்று, கருணாநிதி சிலையின் அருகில் உள்ள மின் இணைப்பை துண்டித்து, அங்கிருந்த 5 அடி நீள குச்சி யின் ஒரு பகுதியில் துணியை கட்டி, அதன்மூலம் பெயிண்டை எடுத்து கருணாநிதியின் சிலை மீது பூசியது தெரியவந்தது. பின்னர், சிலையின் கீழே உள்ள பீடத்திலும், பரவலாக பெயிண்ட்டை ஊற்றிவிட்டு சென்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கலைஞர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய மருத்துவரான விஸ்வநாதன் (77) என்பவரை போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். கலை ஞர் சிலையின் மீது கருப்பு மைய எதற்காக பூசினார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
‘பந்தியில் பாமக இல்லை’: எடப்பாடி பழனிசாமி நையாண்டி
கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் விவசாயி களுடன் கலந்துரையாடிய பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவரிடம், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா சொல்லி வருவது குறித்து எழுப்பிய கேள்விக்கு, “கூட்டணி ஆட்சி இல்லை. எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறார். நீங்கள் தவறாக புரிந்து கொண்டு உள்ளீர்கள். இந்த எங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார்? என்பதை நீங்களே சொல்லுங்கள். அதிமுக தான் தலைமை தாங்குகிறது. அப்படி இருக்கும் பொழுது, நான் எடுக்கிற முடிவு தானே இறுதியாக இருக்கும். எனவே நான் தான் முடிவு எடுப்பேன்” என்றார். அடுத்ததாக, கூட்டணிக்கு வந்தால் அமைச்சரவையில் இடம் கேட்பேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறுகிறாரே என்ற கேள்விக்கு, “அவங்க வந்தா பாத்துக்கலாம் விடுங்க. பந்தியிலயே உக்கார வைக்கல, இலை ஓட்டை என்றால் என்ன பண்ணுவது?” என்று எடப்பாடி பழனிசாமி நையாண்டியாக பதிலளித்தார்.
பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் மாநில மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு
தூத்துக்குடி, ஜூலை 16 - தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் 7 ஆவது மாநில மாநாடு அக்டோபர் 11 அன்று தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.அப்பாதுரை தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் எம்.ஆனந்தம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு பவர் இன்ஜினியர் அசோசியேசன் மாநில பொதுச் செயலாளர் அருள் செல்வம், மாநிலத் தலைவர் குரு வேல், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரசல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதில் மாநில மாநாட்டு வரவேற்புக் குழு தலைவராக ஆர்.ரசல், செயலா ளராக எஸ்.அப்பாதுரை, பொருளாள ராக எம்.ஆனந்தம் உள்ளிட்ட 60 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப் பட்டது.