தியாகி என்.வி நினைவுதினம் கடைப்பிடிப்பு
தஞ்சாவூர், செப். 21- வர்க்கப் போராளி, மக்கள் தலைவர், தஞ்சை தியாகி என்.வெங்கடாசலத்தின் 48 ஆம் ஆண்டு நினைவு தினம், ஞாயிற்றுக்கிழமை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகரக் குழு சார்பில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, சிபிஎம் மாநகரச் செயலாளர் எம். வடிவேலன் தலைமையில், தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த தியாகி என்.வி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில், மாநிலச் செயற்குழு உறுப்பினர், டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், கே.அருளரசன், ஆர்.கலைச்செல்வி, என்.சரவணன், மூத்த தலைவர்கள் என்.சீனிவாசன், கோ.நீலமேகம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, ஜி.அரவிந்தசாமி, ஏ.அருணாதேவி, வாலிபர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் சந்துரு, மாநகரக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர் மு.வைஜெயந்தி மாலா, அரங்க முன்னணி உறுப்பினர்கள், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஹரீஸ், ஏ.ஐ.டி.யு.சி துரை.மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.