tamilnadu

img

தியாகி என்.வெங்கடாசலம் மனைவி லீலாவதி அம்மாள் காலமானார்

தஞ்சாவூர், நவ.29 - தஞ்சாவூர் மாவட்டம் இராய முண்டான்பட்டியில் தோழர் லீலாவதி அம்மாள் காலமானார். அவருக்கு வயது 85. அவர் தஞ்சை மண்ணின் மகத்தான தியாகி என்.வெங்கடாசலம் அவர்களது மனைவி ஆவார். தோழர் என்.வி. என்று அழைக்கப் பட்ட என். வெங்கடாசலம் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக,  தஞ்சாவூர், திருவை யாறு தாலுகா பகுதியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போரா ட்டங்களை முன்னெடுத்துச் சென்ற  மூத்த தலைவர். குறிப்பாக தஞ்சாவூர் தாலுகாவில், குறிப்பாக இராயமுண் டான்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி களில், தீண்டாமை வன்கொடுமை களுக்கு எதிராகவும், சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக போராடியவர். இதனால் சாதி ஆதிக்க வெறியர் களால் படுகொலை செய்யப்பட்டார். கட்சிப் பணிகளில் தியாகி என். வெங்கடாசலம் தீவிரமாக ஈடுபடு வதற்கும், அவருடைய படுகொலைக்கு  பிறகு வறுமையான சூழ்நிலையிலும் குடும்பத்தை நடத்தவும்,  பிள்ளைகளை வளர்க்கவும்,  பிள்ளைகள்  கட்சியின் ஊழியர்களாக கட்சிப் பணியாற்ற உறுதுணையாகவும் ஆதரவாகவும் இறுதிமூச்சு வரை இருந்தவர் லீலாவதி அம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தியாகி என்.வெங்கடாசலம்- லீலாவதி தம்பதியரின் மகன்கள் வழக்கறிஞர் வெ. ஜீவகுமார் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், முனைவர் வெ.சுகுமாறன் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில  துணைத்தலைவராகவும், வெ. கண்ணன் மற்றும் மருமகள் எஸ்.  தமிழ்ச்செல்வி ஆகியோர் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக வும் பணியாற்றி வருகின்றனர். செங்கொடியை உயர்த்திப் பிடித்துள்ள பற்றுறுதி மிக்க கட்சிக்குடும்பமாக தியாகி என்.வி- லீலாவதி குடும்பம் அர்ப்பணித்துக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கே.பாலகிருஷ்ணன் இரங்கல்

தோழர் லீலாவதி அம்மாள் மறைவுச் செய்தி அறிந்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். தியாகி என். வெங்கடாசலம் ஆற்றிய கட்சிப்பணிகளுக்கு உறு துணையாக நின்று, குடும்பத்தையே கட்சி மீது பற்று கொண்ட அர்ப்பணிப்பு மிக்க வளர்த்து எடுத்த பெருமை லீலாவதியை   சாரும்; அவரது மறைவுக்கு  கட்சியின்  செயற்குழு ஆழ்ந்த அஞ்சலி யையும், அவரது குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது என்றும் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தலைவர்கள் அஞ்சலி

திங்களன்று இரவு காலமான லீலா வதி அம்மாள் இறுதி நிகழ்ச்சி செவ்வாய்க் கிழமை இராயமுண்டான்பட்டியில் நடந்தது. கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி, கந்தர்வ கோட்டை எம்எல்ஏ எம். சின்னத்துரை, மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த  தலைவர் என்.சீனிவாசன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க  பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன், மாதர் சங்க மாநிலத் தலை வர் எஸ். வாலண்டினா, திமுக மத்திய  மாவட்டச் செயலாளரும், திருவை யாறு எம்.எல்.ஏவுமான துரை.சந்திர சேகரன், திமுக மாவட்ட துணைச் செய லாளர் து.செல்வம், அமமுக மாநில  பொருளாளர் முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி, திருவையாறு முன்னாள் எம்எல்ஏ ரெத்தினசாமி, சிபிஎம் தஞ்சை  மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டி யன், கடலூர் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயசீலன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா,  புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், ஐ.வி.நாகராஜன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, தஞ்சை மாவட்ட மூத்த தலைவர் ஆர். சி.  பழனிவேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோகரன், சி.ஜெயபால், பி. செந்தில்குமார், என்.சிவகுரு, ஆர்.கலைச்செல்வி, கே.அருளரசன், என்.சுரேஷ்குமார், இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் கோ.அர விந்த்சாமி, தஞ்சை, திருச்சி, புதுக் கோட்டை, திருவாரூர், மாவட்டச் செயற் குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைவர்கள் இரங்கல்

தோழர் லீலாவதி மறைவுக்கு கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்க ராஜன்,  மத்தியக்குழு உறுப்பினர்கள்  உ.வாசுகி, பி.சம்பத், பெ. சண்முகம்   உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


 

;