tamilnadu

விருதுநகர் மற்றும் நாகர்கோவில் முக்கிய செய்திகள்

விருதுநகர் :  கொரோனா தொற்றால் பாதித்தோர்  எண்ணிக்கை 156 ஆக உயர்வு  

விருதுநகர், ஜூன்.5 விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில்   கொரோனா தொற்றால் 7 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.  விருதுநகரில் கருப்பசாமி நகரை சேர்ந்த 14 வயது பள்ளிச் சிறுமி மற்றும்  அவ ரது சகோதரர்,  அல்லம் பட்டியை சேர்ந்த 31 வயது வாலிபர்,  புல்லலக்கோட்டை யை சேர்ந்த 31வயது பெண், சென்னையிலிருந்து சிவ காசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்திற்கு வந்த கணவன் மனைவி மற்றும் திருச்சுழி அருகே உள்ள காளையார் கரிசல்குளம்  கிராமத்திற்கு வந்த பெண் என  மாத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதா ரத்துறையினர் தெரிவித்த னர்.  இதையடுத்து, விருது நகர் மாவட்டத்தில் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்தது.

தையல் கலைஞர் ஓய்வூதிய நிலுவை கோரி முதல்வருக்கு தபால் அனுப்பும் இயக்கம்

நாகர்கோவில், ஜூன் 5- தையல் கலைஞர்களுக்கு 9 மாத ஓய்வூதியமும் அரசு அறிவித்த கோவிட் 19 பேரிடர் கால நிவாரணமும் வழங்க கோரி தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தபால் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்கள் மாவட்ட நலவாரிய அலுவலகத்தில் பதிவு செய்து ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்களுக்கு கடந்த 9 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஏற்கனவே வறுமையில் வாடும் இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாத காலமாக கோவிட் 19 தொற்று தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக மேலும் பசி பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளனர். 60 வயது கடந்த தையல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய நிலுவை, கோவிட் கால நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் குலசேகரம் தபால் நிலையத்தில் தமிழக முதல்வர் மற்றும் முதன்மை செயலாளருக்கு தபால் அனுப்பும் போராட்டம் தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஐடா ஹெலன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் இராமச்சந்திரன், தங்கம், சிஐடியு மாவட்ட நிர்வாகி நடராஜன் உட்பட தையல் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.