கருணை அடிப்படையிலான பணி நியமன விதிகளில் முக்கிய திருத்தம்
சென்னை, ஆக.22 - சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து, கருணை அடிப்படையிலான பணி நியமன விதி களில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 இல் சட்டமன்றத்தில் அறிவித்தபடி உருவாக்கப்பட்ட ‘கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் விதிகள்-2023’ இல் நீதிமன்றம் திருத்தம் செய்ய உத்தர விட்டது. நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாததால் அவ மதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. புதிய திருத்தங்கள்படி, இனி மாநில அளவிலான ஒற்றை முன்னுரிமைப் பட்டியல் பராமரிக்கப்படும். விண்ணப் பங்கள் ஆன்-லைன் மூலம் மட்டுமே பெறப்படும். மூன்று ஆண்டுகளுக்குள் பணி நியமனம் வழங்கப்படும் வகையில் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து, மூன்று ஆண்டுகளுக் குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். கணவன்-மனைவிக்கு 50 வயது வரையிலும், மகன், மகள், சகோதரருக்கு 40 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.