tamilnadu

img

சிபிஎம் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா

சிபிஎம் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா

நாகர்கோவில், அக். 2- சிபிஎம் குமரி மாவட்ட க் குழு சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் நாகர்கோவில் வடசேரி காந்தி பார்க்கில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு சிபிஎம் குமரி மாவட்ட செயலாளர் ஆர். செல்ல சுவாமி தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் அகமது உசைன், எஸ்.அந்தோணி, என். ரெஜீஸ்குமார், என்.எஸ்.கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. நூர் முகம் மது, நாகர்கோவில் மாநகர செயலா ளர் எஸ்.அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. காந்தி குறித்தும் அவரது தியாகம் குறித்தும் நினைவு கூர்ந்து பேசினர். குமரி மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மகாத்மா  காந்தி பிறந்த பிறந்த தினத்தை முன்னிட்டு வடசேரி காந்தி பார்க்கில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து  மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் நடைபெற்றது.இதில் மாநிலத் தலைவர் நூர்முகம்மது, பால பிரஜாபதி அடிகளார், அருட்பணி மரியவின்சென்ட், அகமது உசேன், மு.சம்சுதீன்,   பேரா.நாகராஜன், பேரா.மனோ கர ஜஸ்டஸ், எஸ், அந்தோணி, மீனாட்சி சுந்தரம், அசீஸ், காலித், தாமோதரன், சுந்தரராஜ் , மாந கர செயலாளர் எஸ்.அருணாச லம், நாகராஜன், கிருஷ்ணன், அந் தோணி பால் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.