tamilnadu

img

கழிவுப்பொருளை கலைப் பொருளாக்கிய மதுரை ரயில்வே ஊழியர்கள்

கழிவுப்பொருளை கலைப் பொருளாக்கிய  மதுரை ரயில்வே ஊழியர்கள்

மதுரை, அக்.9- மதுரை ரயில்வே பெட்டி பராமரிப்பு பணிமனை ஊழியர்கள், பயன்பாடு இழந்த கழிவுப் பொருட்களை கலைப் பொருளாக மாற்றி, தங்கள் அலுவலக வளாகத்தை அழகுபடுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளனர். வருடம் தோறும் நடைபெறும் ரயில்வே தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கழிவுப் பொருள் மேலாண்மையும், ரயில்வே வளாகங்களின் அழகுபடுத்தலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஊழியர்கள் இரும்புத் தகடுகள், குழாய்கள், போல்ட், நட்டுகள், ரயில் பெட்டி அச்சாணிகள், உடைந்த இரும்பு சுருள்கள், தண்டவாள துண்டுகள்  உள்ளிட்ட பல்வேறு உபரி பொருட்களைப் பயன்படுத்தி ஒரு கோவில் கோபுரம் உருவாக்கியுள்ளனர். இந்த புதுமையான கலைப் பொருள் கோட்ட இயந்திரவியல் பொறியாளர் குண்டேவார் பாதலின் வழிகாட்டுதலுடன், ஊழியர்கள் ரமேஷ், அருண்குமார், கண்ணன், ஜெரால்ட் ஆண்ட்ரூஸ், பினாய் குமார், ஜஸ்டின் பீட்டர், லக்ஷ்மணன், சண்முக பாண்டி, இசக்கிராஜா, தாமஸ், ரூபேஷ், விகாஸ் குமார் குப்தா, குருமூர்த்தி ஆகியோரின் 10 நாள் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது. இந்தக் கலைப் பொருள், ரயில்வே ஊழியர்களின் புதுமை, திறமை, குழு ஒருமை மற்றும் நிறுவனத்தின் வளத்தை பலப்படுத்தும் மனப்பாங்கை பிரதிபலிக்கிறது. தற்போது, இந்த கோபுர வடிவ கலைப் பொருள் மதுரை கோட்ட ரயில்வே அலு வலக நுழைவாயில் அருகே நிறுவப்பட்டு, பார்ப்பவர்களை கவர்ந்து வருகிறது.