tamilnadu

img

மதுரை: அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்

அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள ராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரியும், மதுரையிலிருந்து உத்தரப்பிரதேசம் (பிராக்யா) வாரணாசி வரை இயக்கப்படும் தனியார் ரயில் சேவையை கண்டித்தும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்துநிறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன் எம்.பி இந்த தேசத்தின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கியுள்ள அக்னிபத் திட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்தார்.