tamilnadu

மதுரை,திண்டுக்கல், விருதுநகர் முக்கிய செய்திகள்

ஜூன் 30 வரை பேருந்துகள் ஓடாது
மதுரை, ஜூன் 23- கொரோனா பரவலால் இன்று முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை பிறப்பித்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மதுரையில் பேருந்துகள் முடக்கப்படு கின்றன. மதுரையைப் பொறுத்தமட்டில் கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஒன்றி யத்திற்குட்பட்ட பகுதிகள், பரவை பேரூ ராட்சி பகுதிகளில் பொதுப்போக்குவர த்து முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. சாத்தூர், சிவகாசி, இராஜபாளையம் மதுரை வரும் பேருந்துகள் திருமங்கலம் வரை மட்டும் இயக்கப்படும். அருப்புக் கோட்டை-மதுரை மார்க்கத்தில் காரியா பட்டி வரை பேருந்து இயங்கும். இராம நாதபுரம், மானாமதுரை மார்க்கத்தில இயங்கும் பேருந்துகள் திருப்புவனம் வரை மட்டும் இயங்கும். சிவகங்கை -மதுரை இடையிலான பேருந்துகள் பூவந்தி வரை மட்டுமே இயங்கும். சிங்க புனரி, கொட்டாம்பட்டி, திருப்பத்தூர் மார்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகள் மேலூர் வரை மட்டுமே இயங்கும். நத்தம் -மதுரை மார்க்கத்தில் கடவூர் வரை மட்டும் பேருந்து இயங்கும். திண்டுக்கல் -மதுரை மார்க்கத்தில் வாடிப்பட்டி வரை மட்டுமே பேருந்து இயக்கப்டும். தேனி-உசிலம்பட்டி-மதுரை மார்க்கத்தில் செக்காணுரணி வரை மட்டுமே பேருந்து கள் இயங்கும்.

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு
திண்டுக்கல், ஜூன் 23- மின்கட்டண உயர்வைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம்  எரியோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, ஒன்றியச்செயலாளர் முனியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்  கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 

பதவி பறிபோன அமைச்சர் ஜீயரை சந்தித்து ஆலோசனை
திருவில்லிபுத்தூர், ஜூன் 21- தமிழக பால்வளத்துறை அமைச்சராக வும் அதிமுக விருதுநகர் மாவட்டச் செய லாளராகவும் பொறுப்பு வகித்தவர் இராஜேந்திர பாலாஜி. இவரது கட்சிப் பொறுப்பை முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பறித்துக்கொண்டனர். தற்போது அமைச்சர் என்ற அந்தஸ்தோடு மாவட் டத்தை வலம் வருகிறார். இந்தநிலையில் செவ்வாயன்று இராஜேந்திர பாலாஜி திருவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயரை சந்தித்து 30 நிமிடங்கள் பேசியுள்ளார். அமைச்ருடன் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, வடக்கு ஒன்றி யச் செயலாளர் முத்தையா, நகர் செய லாளர் இன்பத்தமிழன், மாவட்டக் கவுன்சிலர் கணேசன் ஆகியோரும் சென்றிருந்துள்ளனர். பின்னர் செய்தி யாளர்களைச் சந்தித்த அமைச்சர் கொரோனா பிரச்சனையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி விட்டு விடைபெற்றார்.

மதுரையில் கொரோனா 8428425000 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
மதுரை, ஜூன் 22- மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு வீடு வீடாக காய்ச்சல் கண்ட றியும் குழு, தொடர்பு கண்டறியும் குழு மற்றும் கிருமி நாசினி குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.  மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் யாருக்கேனும் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் கணக்கெடுப்புக் குழு வினரிடம் தெரிவிக்கவேண்டும். மாநக ராட்சியின் தகவல் மைய எண். 842 842 5000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரி விக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

பொதுக்கழிப்பறை: மறியல் நடத்த முடிவு
திண்டுக்கல், ஜுன் 23- திண்டுக்கல் மாவட்டம் பழனிச்சாலை யில் உள்ளது முத்தனம்பட்டி. குட்டத் துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பொதுக்கழிப்பறை இல்லை. இந்த நிலையில் பொதுக்கழிப்பறை கட்டித்தர வலியுறுத்தி முத்தனம்பட்டி மக்க ளைத்திரட்டி வாலிபர் சங்கம் சார்பில் மறியல் நடத்தப்போவதாக திண்டுக்கல் மாவட்டத்தலைவர் விஷ்ணுவர்தன். மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டக்குழு உறுப்பினர் நந்தகுமார், பிரேம்குமார் அறிவித்துள்ளனர்.

;