tamilnadu

img

மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்... தமிழக முதல்வருக்கு தொழில் வர்த்தக சங்கம் வேண்டுகோள்

மதுரை:
மதுரை விமான நிலைய விரிவாக்கப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு தொழில் வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத் துள்ளது.தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கை:
மதுரை விமான நிலையம் சுமார் 17 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக பெரிய விமான நிலையமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் பயணிகள் மதுரை விமான நிலையத்தின் மூலம் பயணித்து வருகின்றனர்.மதுரை விமான நிலையத்தின் ஓடுபாதை தற்போது 7 ஆயிரத்து 500 அடிநீளத்தில் உள்ளது. இதனை 12 ஆயிரத்து 500 அடி நீளத்திற்கு விரிவாக்கம் செய்ய 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டு விரிவாக்கப் பணிகளும் தொடங்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட தொய்வு காரணமாக விரிவாக்கப் பணிகள் தாமதமாகியது. விமான நிலைய விரிவாக்கத்திற்காக அருகில் உள்ள அயன்பாப்பாக் குடி, பெருங்குடி உள்பட 6 கிராமங்களில்இருந்து சுமார் 460 ஏக்கர் பட்டா நிலங்களும், 155 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும் கையகப்படுத்தப்படுகிறது. நில உரிமையாளர்களுக்கு ரூ.166 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது 90 சதவீத கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டால் மதுரை சுற்றுச் சாலை துண்டிக்கப் படும் நிலை இருந்தது. இதன் காரணமாக சென்னையிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு என்எச்45பி வழித் தடத்தில் செல்லும் வாகனங்களுக்கும், பிற தென் மாவட்டங்களுக்கும், கேரளா மாநிலத்திற்கும் என்எச் 7 வழியாக செல்லும் வாகனங்களுக்கும் மிகுந்த சிரமம்ஏற்படும். மாற்றுப்பாதையில் வாகனங் கள் செல்ல வேண்டுமானால் சுமார் 5 கி.மீட்டருக்கு மேல் கூடுதல் எரி
பொருள் செலவு, காலவிரயம் போன்றவை ஏற்படும் என்பதால் சுற்றுச் சாலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்மதுரை விமான நிலைய ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்கு, கடந்த வாரத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட் பத் துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன், மதுரை சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் கீழே சுரங்கப்பாதை (under pass) முறையில் வாகனங்கள் செல்லவும், மேலே விமான ஓடுதளம் அமையவும் திட்டம் இறுதி செய்யப்பட்டு இத்திட்டம் விமான போக்குவரத்து ஆணையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இதே போன்ற திட்டம் பிரதமரின்சொந்தத் தொகுதியான வாரணாசி லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தில் மேல்புறம் விமான ஓடுதளமும், கீழ் புறத்தில் என்எச் 56 வாரணாசி-லக்னோ நான்கு வழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மைசூர் விமான நிலையத்திலும் மேல்புறம் விமான ஓடுதளமும், கீழே என்எச் 212 மைசூர்-நீலகிரி சாலையும் அமைக்கப்பெற்று இவ்விரு விமான நிலையங்களிலும் ஓடுதளம் சமீபத்தில்விரிவாக்கப்பட்டு விமான போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கூடுதல் நிதியை அரசு ஏற்க வேண்டும் 

ஆனால், மதுரை விமான நிலையஓடுதள விரிவாக்கத்திற்காக தயாரிக் கப்பட்ட திட்ட அறிக்கையின்படி சுரங்கப்பாதை முறையில் அமைக்க ரூ.250 கோடி மதிப்பீடு ஆகும் என்றும், சுற்றுச் சாலையாக அமைக்கப்பட்டால் ரூ.100 கோடி மதிப்பீட்டில் முடித்துவிடலாம் என விமான போக்குவரத்து ஆணையம் கருதி இந்த சுரங்கப் பாதை திட் டத்தை அங்கீகரிக்கவில்லை எனத் தெரிய வருகிறது. சுற்றுச்சாலை அமைக்க கூடுதல் நிலம் தனியாக கையகப்படுத்த வேண்டும். மேலும் அதற்கான எவ்விதப் பூர்வாங்கப் பணிகளும் இதுவரை தொடங் கப்படாத நிலையில் மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத் திட்டம்செயல்பட இன்னும் பல ஆண்டுகள் காலதாமதம் ஏற்படும். எனவே சுரங்கப் பாதைதிட்டத்தினை மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் அங்கீகரிக்க தமிழகஅரசு தொடர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் அல்லது இத்திட்டத்திற்கு ஆகும் கூடுதல் செலவினை தமிழக அரசே ஏற்றுக்கொண்டு மதுரை விமானநிலையத்தில் சுரங்கப் பாதை திட் டத்தினை விரைவில் முடிக்க ஆவன செய்ய வேண்டும்.

தென்தமிழகத்தின் தொழில், வணிக, பொருளாதார வளர்ச்சி மேம்படமதுரையில் மேல் பகுதியில் விமான ஓடுதளமும், கீழ்பகுதியில் வாகனங்கள் செல்ல ரிங் ரோடு நான்கு வழிச்சாலையும் அமைத்திட, நடவடிக்கை மேற் கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்திட தமிழக முதல்வரையும், மற்றும் தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரையும், தென் தமிழக தொழில் வணிகத்துறையினரின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

;