தோழர் முகமது அலி காலமானார்
தேனி, ஜன.3- உத்தமபாளையத்தை சேர்ந்த முக மது அலி (70) ஞாயிறன்று காலமானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாளையம் கிளை செயலாளராக பணி யாற்றியவர். கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் சி.மு.இப்ராஹிமின் சகோ தரர் ஆவார். கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர் ஆவார். இவரது இறுதி நிகழ்ச்சி பாளை யத்தில் திங்களன்று நடைபெற்றது. கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் டி.வெங்க டேசன், மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மூத்த தலைவர்கள் கே. ராஜப்பன், எல்.ஆர்.சங்கரசுப்பு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி. கண்ணன், ஏரியா செயலாளர் எஸ்.சஞ்சீவிக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். முகமது அலி மறைவுக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாளை சூலக்கரையில் மின்தடை
விருதுநகர், ஜன.3- விருதுநகர் மாவட்டம், சூலக்கரை துணை மின் நிலையத்தில் ஜனவரி 5 இல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் பெறும் சூலக்கரை, மாவட்ட ஆட்சியர் வளாகம், ஆயுதப்படை, காவலர் குடி யிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே. செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மார்டன் நகர், மாத்திநாயக்கன்பட்டி, தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள் ளார்.
குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி
திருவில்லிபுத்தூர், ஜன.3- திருவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் செக்கடி தெருவில் வசித்தவர் மாரியப்பன் (80). இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றுள்ளார். பின்னர் இவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து இவரது வீட்டார் பல இடங்களிலும் தேடி இவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் திருக்குளத்தில் மாரியப்பன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து மாரியப்பன் மகன் ராஜா அளித்த புகாரின் பேரில் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முள்ளிச்செவல் சமத்துவபுரத்தில் அடிப்படை வசதி இல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார்
விருதுநகர், ஜன.3- சாத்தூர் அருகே உள்ள முள்ளிச் செவல் சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது: முள்ளிச்செவல் கிராமத்தில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த 100 குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு அரசின் சார்பில் பட்டா வழங்கப்படவில்லை. மேலும், வீடுகளைப் பராமரிக்க எந்த நிதி யும் ஒதுக்கப்படவில்லை. இதன் காரண மாக, வீடுகள் சேதமடைந்து வருகின்றன. எனவே, உடனடியாக வீடுகளைப் பரா மரிக்க அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்கு குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப் படை வசதிகளையும் செய்து தர வேண் டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ள னர்.
ஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்டு உற்சவம்
திருவில்லிபுத்தூர், ஜன.3- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி நீராட்டு உற்சவம் நடைபெறும். அதன் துவக்க நிகழ்ச்சியாக பச்சை பரப்பல் நிகழ்ச்சியும் இதைத்தொடர்ந்து பகல் பத்து உற்சவத்தின் கடைசி நாள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். இந்தாண்டு ஜனவரி 3 ம் தேதி ஆண் டாள் கோவில் முன்பு அமைந்துள்ள வேத பிரான்பட்டர் மாளிகையில் பச்சை பரப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கண்காணிப்பாளர் பாண்டியன், கோவில் அலுவலர்களும் பணியாளர்களும் செய்திருந்தனர். ஜனவரி 13ஆம் தேதி காலை 7.30 மணிக்கு ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது.
தேனியில் ஆயிரம் இடங்களில் இல்லம் தேடி கல்வி திட்ட மையம்
தேனி, ஜன.3- தேனி மாவட்டத்தில் 1000 இடங்களில் இல்லம் தேடி கல்வி திட்ட மையம் துவக்கப்பட்டது. வட புதுப்பட்டியில் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சர வணக்குமார் முன்னிலையில் திறந்து வைத்தார். தேனி மாவட்டத்தில் கணக்கிடப்பட்டுள்ள 1,120 குடியிருப்பு பகுதிகளில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னார்வலராக சேவை புரிய இதுவரை 8,421 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2,429 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 674 தன்னார்வலர்கள் தொடக்க நிலை மையங்க ளுக்கும், 818 தன்னார்வலர்கள் உயர் தொடக்க நிலை மையங்களுக்கும் என மொத்தம் 1,492 தன் னார்வலர்கள் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் 1,000 சமுதாயக் கூடங்கள் போன்ற பொது பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களில் மையங்கள் தேர்வு செய்யப்பட்டும், மீதமுள்ள மையங்களை தேர்வு செய்து, தேர்வு செய்யப்பட்டுள்ள தன்னார்வலர்களை பணியமர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மையங்கள் மாலை 5 மணி முதல் செயல்பட வுள்ளது. இம்மையங்களுக்கு தேவையான கரும்பலகை, நோட்டு, புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் வழங் கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, முதன்மைக் கல்வி அலு வலர் ச.செந்திவேல்முருகன், வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத்தலைர் ரேணுகா பாலமுருகன், பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இருவேறு சாலை விபத்துகளில் புதுமண தம்பதி, லாரி ஓட்டுநர் படுகாயம்
திருவில்லிபுத்தூர், ஜன.3- திருவில்லிபுத்தூர் கீழ புது தெருவில் வசிப்பவர் வினோத் குமார் (25). இவரது மனைவி ராசாத்தி (24). இவர் சிவகாசி தனி யார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். புதுமண தம்பதிகளான இருவரும் இராஜபாளையத்தில் உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்றர்.அப்போது, மஞ்சள் பாலிடெக்னிக் அருகில் பைக் மீது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதி யது. இதில் வினோத் குமாரும் ராசாத்தி யும் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து வன்னியம் பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். மற்றொரு விபத்து தென்காசி பாவூர்சத்திரம் திப்பனம்பட்டி யைச் சேர்ந்தவர் உத்திர செல்வன் (32). இவர் கோவையில் பர்னிச்சர் கடையில் லாரி ஓட்டு நராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது லாரியில் நாகர்கோவிலில் சரக்கை இறக்கி விட்டு தென்காசி வந்து அங்கிருந்து திருவில்லிபுத்தூர் வழியாக கோவைக்கு சென்றுகொண்டிருந்தார்.அப்போது அரசு பணிமனை அருகே திடீ ரென ரோட்டை கடந்த கார், லாரி மீது மோதி யது. இதில் உத்திர செல்வன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காதி போர்டு காலனியை சேர்ந்த கார் ஓட்டு நர் அலெக்சாண்டர் (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.