tamilnadu

மதுரை, தேனி, ‎விருதுநகர் முக்கிய செய்திகள்

297 பேருக்கு கொரோனா

மதுரை, ஜூலை 1- தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை போன்ற மாவட்டங்களில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் செவ்வாய் கிழமை வரை 2.557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் புதனன்று மேலும் 297 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,858 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரையில் புதனன்று ஆறு பேர் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 38 அதிகரித்துள்ளது.

தேனியில் இருவர் பலி

தேனி, ஜூலை 1- தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் கொரோனா உறுதி படுத்தப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கம்பத்தை சேர்ந்த 76 வயது தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்
சிகிச்சை பலனின்றி செய்வாயன்று உயிரிழந்தார். ஆண்டிபட்டி சீதாராம்தாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சையின்போது அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கடந்த ஜூன் 27-ஆம் தேதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். இதனையடுத்து தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நான்கா ஆக உயர்ந்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்க்கு நிவாரணப் பொருட்கள்

திருவில்லிபுத்தூர், ஜூலை 1- திருவில்லிபுத்தூரில் இயங்கி வரும் கல்வி மற்றும் சமுதாய மாற்றத்திற்கான அறக்கட்டளை சார்பில் செவ்வாயன்று இராஜபாளையம் வட்டத்தில் பஞ்சாலையில் பணிபுரியும் வெளி மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு இரண்டாம் கட்டமாக சுமார் 1,00,000 ரூபாய் மதிப்புடைய அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. டெஸ்ட் நிறுவன நிர்வாக அரங்காவலர் வேல்மயில் தலைமையில் களஒருங்கிணைப்பாளர் சத்யா, களப்பணியாளர் ரேவதி, சக்தீஸ்வரி, நாகலட்சுமி ஆகியோர் வழங்கினர்.

வாந்தி, வயிற்றுப்போக்கு கொரோனாவுக்கான அறிகுறி

மதுரை, ஜூலை 1- நோய் கட்டுப்பாட்டுக்கான (யுனைடெட் ஸ்டேட்ஸ்மையம்) கொரோனா வைரஸ் தொடர்பாக மூன்று புதியதாக அறிகுறிகளைச் சேர்த்துள்ளன. மூக்கு ஒழுகுதல், குமட்டல் அல்லது வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவையும் கொரோனாவுக்கான அறிகுறிகள் தான் இரண்டு நாட்கள் முதல் 14 நாடகளுக்குள் இந்த அறிகுறி தென்படும் என நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தேனியில் 15 நாள் கட்டுப்பாடு

தேனி, ஜூலை 1- தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வேகமாக பரவி வருகிறது.பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 700 ஐ தாண்டிய நிலையில் தேனி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் கட்டுப் பாடுகளை விதிக்க நெருக்கடி மேலாண்மைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், மற்றும் கட்டுமானப் பொருட்கள் விற்பனைக் கடைகள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மருந்தகம், மருத்துவமனை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டீக்கடை, ஜவுளிக்கடை, நகைக்கடை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட இதரகடைகளை மூடவும், உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

;