ஊரடங்கு காலத்தில் விற்க பதுக்கி வைக்கப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
தஞ்சாவூர், ஜன. 7 - போலி மதுபானங்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில் தனிப்படை அமைக் கப்பட்டு தீவிர சோதனை நடந்து வந்தது. இந்நிலை யில் ஊரடங்கு மற்றும் பொங்கல் பண்டிகையின் போது விற்பனை செய்வ தற்காக வெளிமாநிலங்களில் இருந்து போலி மதுபானங் கள், தஞ்சை கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படையி னருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில், தனிப்ப டையினர், ஏடிஎஸ்பி ஜெயச் சந்திரன் மேற்பார்வையில் சோதனை நடத்தினர். இதில்1600 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பார் உரிமையாளர் கமல் உட்பட மூன்று பேரை கைது செய்த னர். மேலும் 2 வாகனங்க ளும் பறிமுதல் செய்யப்பட் டன. போலி மதுபானங்கள் பதுக்கி வைத்திருந்த குடோ னுக்கும் காவல்துறையினர் சீல் வைத்தனர்.
அரசுப் பள்ளி வளாகத்தில் நீர்க்கசிவை தடுக்க கோரிக்கை
பொன்னமராவதி, ஜன.7 - பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் நாகப்ப செட்டி யார் நினைவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள் ளது. இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி அருகே உள்ள மலையான் ஊரணி முழுவதும் நிரம்பிய நிலையில் உள்ளது. இதனால் அருகே பள்ளமான இடத்தில் அமைந்துள்ள பள்ளி வளாகம் முழுவதும் ஏற்படும் நீர் கசிவை தடுக்கும் வகை யிலும், பாழடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்த இரு வகுப்பறை கட்டிடங்களை இடிக்கும் பணியையும் பொன்னம ராவதி ஒன்றிய ஆணையர் வெங்கடேசன், பொறியாளர் வியா குலம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பள்ளி வளா கத்தில் நீர் கசிவினால் ஏற்படும் பாதிப்பு விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய ஆணையர் வெங்க டேசன் தெரிவித்தார்.
சைபர் க்ரைம் குற்றங்கள்: மாணவர்களுக்கு கருத்தரங்கம்
தஞ்சாவூர், ஜன.7 - தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பெரியார் மணியம்மை அறி வியல் மற்றும் தொழில்நுட்ப நிகர் நிலை பல்கலைக்கழ கத்தில் கணினி வழி குற்றங்கள் தடுப்பு கருத்தரங்கம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா எஸ்.வேலுசாமி தலை மையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், “மாணவர்கள் நல்ல எண்ணங்களையும், பழக்க வழக்கங்களையும் வளர்த்து கொள்ள வேண்டும். கணினி வழியாக நடைபெறும் குற்றங்க ளிலிருந்து எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முகநூல், புலனம் இவற்றினை சரியாக பயன்படுத்த வேண்டும்.
எலக்ட்ரானிக் சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்தா மல் தேவைக்கேற்ப பயன்படுத்துவது மாணவிகளின் கடமை யாகும். மேலும், மாணவர்கள் செல்பி எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மற்றவர்களின் தனிமனித சுதந்திரத்திற்கு கேடு விளைவிக்காமல் இருக்க வேண்டும்” என்றார். மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் பி.கென்னடி பேசுகையில், “டிபி மூலமாகவோ அல்லது வேறு வகை யிலோ மோசடியாக தங்களது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது தெரிந்தால் உடனே 155260 என்ற எண்ணை அழைக்க வேண்டும். மேலும், சமுதாயத்திற்கு நீங்கள் துணை யாக இருக்க வேண்டும். குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக சைபர் க்ரைம் காவல் நிலையத்தையோ அல்லது இணையத ளத்தையோ தொடர்பு கொள்ளலாம். இதுகுறித்த தகவல் களை, பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் சுற்றத்தார்களோடு பகிர்ந்துக் கொள்வது அவசியமாகும்” என்றார்.