சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தப்பி ஓடிய வழக்கு கவனக்குறைவாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக! அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, நவ.6- இந்தியாவில் சட்டவிரோதமாக குடி யேறிய இலங்கை நாட்டவர்கள் தப்பி ஓடிய வழக்கில் கவனக்குறைவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இலங்கையை சேர்ந்தவர்கள் சங்க சிரந்தா, முகமது சப்ராஸ் ஆகியோர் சட்டவிரோதமாக இந்தியாவில் தஞ்ச மடைந்து, போலி ஆதார் அட்டையை தயாரித்ததாக இராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினர் 2 பேரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தங்களை இலங்கைக்கு அனுப்பக்கோரி இரு வரும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை யில் ஆட் கொணர்வு மனுக் களைத் தாக்கல் செய்தனர். இராமநாதபுரம் நீதி மன்றத்தில் அவர்கள் இருவரும் தாக்கல் செய்திருந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி 2 பே ரும் புழல் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டனர். இதனிடையே ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி கள், உயர் நீதிமன்றத்தில் ஆட்கொ ணர்வு மனு நிலுவையில் இருக்கும் போது எவ்வாறு அவர்கள் விடுவிக்கப் பட்டனர், இது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்புடைய வழக்கு அல்லவா என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இந்த மனு செவ்வாயன்று நீதி பதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி, இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய இரு வரும் இலங்கை நீதிமன்றத்தில் சரணடைந்து சிறை காவலில் உள்ளனர் என்றார். இதனை பதிவு செய்த நீதிபதிகள் வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது துறை ரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை குறித்த அறிக்கையை அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
பொள்ளாச்சி, நவ.6- பொள்ளாச்சி அருகே வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் வந்தோரை தடுத்து நிறுத்தலத்தியை சக்கரத்தில் விட்டு விபத்தை ஏற்படுத்திய காவல் உதவி ஆய் வாளர் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளார். கோவை குனியமுத்தூரை சேர்ந்த நகை கடை தொழிலாளர்களான சர்தார், சன்பர், அப்சல் ஆகிய மூவரும் திங்களன்று பொள்ளாச்சியிலுள்ள ஆழியார் அணையை சுற்றிப்பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். கோட்டூர் தென் சங்கம்பாளையம் அருகே வந்தபோது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கோட்டூர் காவல் நிலைய உதவிஆய்வாளர் சம்பந்தம் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர்களின் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் லத்தியை விட்டு தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மூவ ருக்கும் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.