tamilnadu

img

ஒருமாத ஊதியத்தை வழங்கினார் எம்.சின்னதுரை எம்எல்ஏ

புதுக்கோட்டை. மே 26- இலங்கை மக்களுக்கு தனது ஒருமாத  ஊதியத்தை வழங்கினார் சிபிஎம்  மாநி லக்குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை. கடுமையான பொருளாதார நெருக்க டியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்க ளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது.  இந்நிலையில், கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் மே 24, 25 தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரு மான எம்.சின்னதுரை தனது ஒருமாத ஊதி யமான ரூ.ஒரு லட்சத்து 5 ஆயிரத்துக் கான காசோலையை கட்சியின் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கி னார். அருகில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் உள்ளனர்.

;