சிபிஐ மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு
சென்னை, செப்.13- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சென்னை சூளை மேட்டில் சனிக்கிழமை (செப். 13) நடைபெற்றது. இதில், சிபிஐ தேசிய பொதுச்செயலாளராக து. ராஜா, தேசியச் செயலாளர் கள் டாக்டர் கே. நாராயணா, ஆனி ராஜா, மாநிலச் செய லாளர் இரா. முத்தரசன் உள் ளிட்ட தலைவர்களும் மாநி லக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் புதிய மாநி லச் செயலாளராக மு. வீர பாண்டியனை மாநிலக் குழு நிர்வாகிகள் தேர்வு செய்த னர். வீரபாண்டியன் மாநில துணைச் செயலாளராக இருந்து வந்தார். வடசென்னை வியாசர் பாடி பகுதியைச் சேர்ந்த வீரபாண்டியன், கம்யூ னிஸ்ட் கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல் வேறு பதவிகளை வகித்துள் ளார். அனைத்திந்திய இளை ஞர் பெருமன்ற மாநில செய லாளராகவும் பணியாற்றியவர். முதல்வர் வாழ்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளராக மு. வீரபாண்டி யன் தேர்வு செய்யப்பட்டதை யடுத்து அவருக்கு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின், மதி முக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.